நீயாக இருக்கலாம்... | தினகரன் வாரமஞ்சரி

நீயாக இருக்கலாம்...

காற்றானது இழுத்து வந்தது
ஓர் இன்னிசையை – அது
உன் புல்லாங்குழலின்
ஓசையாக இருக்கலாம்...
இல்லை... இல்லை
அது என் பிரம்மைக் கனவின்
அழரலாக இருக்கலாம்
அல்லது என் மனக் கோவிலின்
அபிஷேகமாக இருந்திருக்கலாம்...
தென்றல் தாலாட்டுகின்றது – அது
எனக்காய் உன்னிடம் தூது
செல்ல தயக்கம் காட்டுகிறது
அது காட்டும் தயக்கத்தில் – என்
உள்ளக் கோயிலின் கனவுகள்
உடைந்து நொருங்குகின்றது...
திடீரென சிற்றலையாய் சலனமொன்று
தலைகாட்டுகின்றது மனதோரத்தில்
இத் தென்றலை எனக்காக
அனுப்பியது
“நீயாக இருக்கலாம்” என

எம்.எஸ்.எப். சுமையா, நெல்லிகம, பலாகல

Comments