சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய கொழும்பு பங்குப்பரிவர்த்தனை | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய கொழும்பு பங்குப்பரிவர்த்தனை

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை சர்வதேச மகளிர் தினத்தை அண்மையில் கொண்டாடியது. இந்நிகழ்வின்போது பாலின சமத்துவத்துவமும், பொருளாதாரத்தில் பெண்களின் அதிகளவான பங்களிப்பும் வலியுறுத்தப்பட்ட அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பெண் ஊழியர்களை அங்கீகரித்து மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியையும் செயல்படுத்தியது.

கொழும்புபங்குப் பரிவர்த்தனையின் பெண் ஊழியர்கள் நிறுவனத்தின் முழு ஊழியர்களின் எண்ணிக்கையில் 43% பங்களிப்பினை வழங்குகின்றனர், இது நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரிடையே விரிவடைகின்றது. கடந்த 35 ஆண்டுகளில் அனைத்து மட்டங்களிலும் இலங்கை பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு பெண் ஊழியர்கள் ஆர்வமாக பங்களிப்பு செய்துள்ளனர்.

2021ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் மனிதவளப் பிரிவினால் பெண் ஊழியர்களுக்கு பாராட்டி நினைவுப் பரிசில்களை வழங்குதல், மகளிர் வலுவூட்டல் தொடர்பான உள்ளக நிகழ்வுகள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்குதல் உள்ளிட்ட பல முயற்சிகளை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மீண்டும் உலகவங்கி குழுவின் உறுப்பினரும் பிற உள்ளுர் மற்றும் சர்வதேச பங்காளிகளுமான சர்வதேச நிதியியல் கூட்டிணைப்புடன் 2021 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாக பாலின சமத்துவத்திற்கான ஆரம்ப மணியை ஒலிக்கச் செய்வதற்கு இணைகின்றது. வருடாந்த உலகளாவிய நிகழ்வு பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு நிலையான தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆண்டு நிகழ்வில் முக்கிய பேச்சாளராக ஹேமாஸ் நிறுவனத்தின் குழு பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் இலங்கையில் பொதுக் கூட்டமைப்பு நிறுவனத்தின் முதல் பெண் குழு பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி கஸ்தூரி செல்வராஜா வில்சன் கலந்துகொண்டார்.

Comments