ரமழானே வா! வா! | தினகரன் வாரமஞ்சரி

ரமழானே வா! வா!

முஸ்லிம்களது புனித ரமழான்
தலை பிறை எம்மை நோக்கி
எட்டி எட்டிப் பார்க்கிறது
மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்கின்றது
ஐந்து கடமைகளில் ஒன்றாகும்
ஏழையின் பசியை அறிய
பணக்காரனுக்கு வழி வகுத்த ரமழான்
சிறுவர் முதல் முதியவர் வரை நோற்பர்
இது நோன்பு என்று அழைக்கப்படும்
மனிதன் செய்த பாவங்கள் கழிபடும் மாதம்
ஒரு மாதம் பூராவும் நோன்பு இருக்கின்றது
ரெய்யான் என்ற சொர்க்க வாசல்
திறக்கப்படும் புனித மாதம்
இதை எல்லோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து
காத்திருக்கின்றோம்

இம்முறை சந்தோஷமாக ஏழைவரி கொடுக்க
உதவி செய்வானாக எம்மை படைத்தவன்
எந்த ஒரு குறையும் இல்லாமல் நிறைவாக
ஈடேற இரு கரம் ஏந்துகிறோம்
எம் துகக்களை ஆமீன் ஆக்குவாயாக

இ.ஷமீலா இஸ்மத்

Comments