ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனியுடன் AMF ஒன்றிணைவு | தினகரன் வாரமஞ்சரி

ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனியுடன் AMF ஒன்றிணைவு

இலங்கையின் பழமையான இரு நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களான அசோசியேட்டட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF) மற்றும் ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AFC) ஆகியன ஒன்றிணைந்து, இலங்கையின் வளர்ந்து வரும் நிதிச் சேவைகள் துறையில் எழும் தேவைகளை நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளன.

இது தொடர்பான அறிவித்தலை 2021 ஏப்ரல் 1ஆம் திகதி கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிட்டுள்ளன. இந்த ஒன்றிணைவு தொடர்பான நீண்ட கால செயன்முறைகள் முழு ஒழுக்க நியதிகள் மற்றும் விதிமுறைகளுக்கமைய தற்போது உத்தியோகபூர்வமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த நிறுவனங்கள் இனி AMF பெயரில் இயங்கும் என்பதுடன், இரு நிறுவனங்களின் ஒன்றிணைந்த வலிமையினுௗடாக, இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உயர் ஸ்தானத்துக்கு செல்லும் தெளிவான நோக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த ஒன்றிணைவு தொடர்பாக பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டி. எம். ஏ. சலே கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பெருமையுடன் அனுஷ்டிக்கின்றோம். இந்த ஒன்றிணைவினுௗடாக, ஆற்றல்கள், வலிமை மற்றும் நிபுணத்துவம் போன்றன எதிர்காலத்துக்கு சிறந்த ஆற்றலை வழங்குவதாக அமைந்துள்ளன.

இரு நிறுவனங்களையும் சேர்ந்த பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கு இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளதுடன், அவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றவதற்கு நாம் முக்கியத்துவமளிக்கின்றோம்.

ஒன்றிணைந்து, ஒரு அர்ப்பணிப்பான அணியாக செயலாற்றுவதனுௗடாக, நிதித் துறையை புரட்சிக்குட்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், வாடிக்கையாளர்களின் ஆர்வத்துக்கு முக்கியத்துவமளிக்கும் தீர்வுகளையும் சேவைகளையும் வழங்க முன்வந்துள்ளோம்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “AMF மற்றும் ஆர்பிகோ ஃபினான்ஸ் ஆகியன நாட்டிலுள்ள சில பழமையான நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் உள்ளடங்கியுள்ளன. இரு நிறுவனங்களும் பிரத்தியேகமான வலிமைகள், நிபுணத்துவம் மற்றும் நிபுணர்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், உண்மையில் பரந்தளவு நிறுவனத்தை கட்டியெழுப்ப உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.

Comments