Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை மே 5 முதல் 12 வரை | தினகரன் வாரமஞ்சரி

Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை மே 5 முதல் 12 வரை

இவ்வருடத்தில் மிகவும்் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிகப்பெரும் புத்தக விற்பனை நிகழ்வான, Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை (பிக் பேட் வுல்ஃப்), இலங்கை முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்காக, மே 05 - 12 வரை மீண்டும் களைகட்டப் போகிறது. இந்த ஒன்லைன் புத்தக விற்பனையின் இரண்டாம் நிகழ்வானது 2021 ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உத்தியோகபுூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவ்வூடகவியலாளர் சந்திப்பானது, Pro Read Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும் இலங்கையின் Big Bad Wolf புத்தகங்களுக்கான பங்குதாரருமான நிஷான் வாசலதந்திரியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில், Big Bad Wolf Books இன் இணை நிறுவனர்களான, ஜக்குலின் என்ஜி, அன்ட்ஷரூ யப் ஆகியோர் இணைந்து கொண்டதோடு, இலங்கையின் Big Bad Wolf பங்குதாரரான தீபக் மாதவன் கோலாலம்பூரிலிருந்து வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த Pro Read Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும் இலங்கையின் டீபை டீயன றுழடக புத்தகங்களுக்கான பங்குதாரருமான நிஷான் வாசலதந்திரி, உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையான இந்நிகழ்வு, கொவிட்-19 தொற்று சவால்கள் காரணமாக ஒன்லைனில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளது. மலேசியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இத்தொற்றுநோய் பரவல் காரணமாக, அந்நாட்டில் இன்னும் பயணக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் இவ்வாறான கடினமான வேளையிலும், Big Bad Wolf Books ஆனது, தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும ் அதன் ரசிகர்களுக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அவர்களது வீடுகளிலிருந்தவாறே பாதுகாப்பாகவும் வசதியாகவும் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான தெரிவை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்றார்.

Comments