நெஸ்லே மற்றும் டயலொக் இணைந்து இலங்கையின் முதல் தானியங்கி உணவு குளிரூட்டல் தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

நெஸ்லே மற்றும் டயலொக் இணைந்து இலங்கையின் முதல் தானியங்கி உணவு குளிரூட்டல் தீர்வு

நெஸ்லே லங்கா தனது குளிரூட்டல் களஞ்சிய வெப்பநிலையை முகாமைத்துவம் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு புத்தாக்கமான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதன்மை வணிக தீர்வுகள் வழங்குநரான டயலொக் என்டர்பிரைசால் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவுத் தொழிற்துறையில் இந்த வகையில் முதன்முதலாக அறிமுகமாகின்ற ஒரு தீர்வாக இது மாறியுள்ளது. நெஸ்லேயின் மூலப்பொருட்களின் குளிரூட்டல் களஞ்சியப்படுத்தலுக்கான உகந்த நிலைமைகளின் பேணல் பராமரிப்பை இது தன்னியக்கமயமாக்குவதுடன், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் அலாரங்களைத் தூண்டுவதன் மூலமும் மற்றும் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தித் தகவல் விழிப்பூட்டல்களைத் தோற்றுவிக்கின்றது. முந்தைய மனிதரீதியான கண்காணிப்பு முறைமையைப் போலன்றி, புதிய தீர்வானது மேம்பட்ட தொழில்நுட்பம், இணைப்பு தளங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் அனுகூலத்தின் மூலம் நெஸ்லே லங்காவின் தலைசிறந்த கடுமையான தர முகாமைத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உதவும்.

“தரம் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாங்கள் அதிமுக்கியத்துவம் அளித்துள்ளதுடன், எங்கள் தயாரிப்புகள், கட்டமைப்புகள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

ஒரு தயாரிப்பில் நெஸ்லேயின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை தரத்திற்கான உத்தரவாதத்தின் அடையாளம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த முக்கிய பலத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்தும் கடுமையாக உழைக்கிறோம். தொழிற்துறையில் முதன்முதலாக அறிமுகமாகின்ற இந்தத் தீர்வை அறிமுகப்படுத்துவதில் டயலொக் என்டர்பிரைசுடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று நெஸ்லே லங்கா பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் கவாலின் குறிப்பிட்டார்.

“நெஸ்லே நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள குளிரூட்டல் களஞ்சியப்படுத்தல் வெப்பநிலை கண்காணிப்புத் தீர்வு பகிரங்க புத்தாக்கங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். இந்த வணிக பெறுமதியைத் தோற்றுவிப்பதில் நெஸ்லே மற்றும் டயலொக் என்டர்பிரைஸ் சொலூஷன் அணிகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டுள்ளன.

Comments