இலங்கையில் மிகவும் நேசிக்கப்படும் வர்த்தக நாமங்களான குமாரிகா மற்றும் பேபி செரமி நேபாளத்தில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் மிகவும் நேசிக்கப்படும் வர்த்தக நாமங்களான குமாரிகா மற்றும் பேபி செரமி நேபாளத்தில் அறிமுகம்

ஹேமாஸ் கன்சியூமர் ப்ராண்ட்ஸ் (Hemas Consumer Brands) குழு, இலங்கையின் மிகவும் நேசிக்கப்படும் குழந்தை மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களான பேபி ஷெரமி மற்றும் குமாரிகாவை நேபாளிய சந்தைக்கு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. நேபாளத்தின் எவரெஸ்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது நேபாளின் முன்னாள் பிரதமர் மேன்மைமிகு ஜஹல நாத் கானல், ஹேமாஸ் மேனுபேக்ச்சரிங் (பிரைவேட்) லிமிடெட், ஸ்ரீ லங்கா (Hemas Manufacturing (Pvt) Ltd, Sri Lanka) வின் நிர்வாக பணிப்பாளர்,  ரோய் ஜோசப், ஹஜுர்ளாய் நமஸ்தே ட்ரேட் லிங்க் (பிரைவேட்) லிமிடெட் (Hajurlai Namaste Trade Link (Pvt.) Ltd.) இன் தலைவரும் ஹேமாஸ் வர்த்தக நாமத்திற்கான நேபாளிய பிரத்தியேக விநியோகருமான தாரா பஹதூர் குன்வர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டு வேறு பல பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. 

நேபாளிய சந்தையில் நுழைவை முன்னிட்டு கருத்து தெரிவித்த ஹேமாஸ் மேனுபேக்ச்சரிங் (பிரைவேட்) லிமிடெட், ஸ்ரீ லங்கா (Hemas Manufacturing (Pvt) Ltd), நிர்வாக பணிப்பாளர் திரு. ரோய் ஜோசப், எமது வர்த்தக நாமங்களை நேபாளில் தடம் பதித்து, விரிவு படுத்தி, நேபாளிய வாடிக்கையாளரிடையே கொண்டு செல்வதற்கு சரியான விநியோகஸ்தரை தேர்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விரிவாக்கமானது நேபாளிய வாடிக்கையாளர்களுக்கு இலங்கை,பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பல நாடுகளால் விரும்பப்பட்ட எமது சிறந்த பொருட்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எங்கள் நம்பகமான உள்நாட்டு பொருட்களை பிராந்தியத்திற்கு கொண்டு செல்வதற்கும், பாரிய சந்தைகளுள் பங்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குமான எங்கள் மூலோபாயத்திற்கு அமைய இந்த விரிவாக்கம் உள்ளது.

பிரபல்யமான வர்த்தக நாமங்களை கொண்டு புதிய சந்தையை அடைந்ததுடன், இவ்வருட ஆரம்பத்தில் Hemas Manufacturing தமது குமாரிகா கூந்தல் எண்ணெய் உற்பத்தி செயற்பாட்டை இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவியது. 

அவர்களின் சிறந்த அர்பணிப்பை தொடர்ந்து 2019 ஆண்டில் ஹேமாஸ் மேனுபேக்ச்சரிங்( Hemas Manufacturing) இன் சர்வதேச வர்த்தகப் பிரிவு, National Chamber of Exporters Awards நிகழ்வில் 'பிற தொழில்துறை பொருட்கள் பிரிவில்' இரண்டு தங்க விருதுகளை பெற்றுக்கொன்டதுடன், SLIM Brand Excellence நிகழ்வில் அவ் 'வருடத்தின் ஏற்றுமதி வர்த்தக நாமத்திற்கான (Export Brand of the year) தங்க விருதையும் தன்வசப்படுத்திக்கொண்டது.

Comments