பெரிய திரையுடன் அதிக இலங்கையரை ஈர்க்கும் OPPO A1K | தினகரன் வாரமஞ்சரி

பெரிய திரையுடன் அதிக இலங்கையரை ஈர்க்கும் OPPO A1K

ரூபா 19,990எனும் விலையுடன், 4000mAh மின்கலம் மற்றும் 2GB RAM + 32GB ROM கொண்ட OPPO A1k ஆனதுரூபா 20,000இற்கும் குறைவான தொலைபேசி வரிசையில் பூரண செயற்றிறனை ஈடுசெய்யும், புகழ்பெற்ற கையடக் தொலைபேசி மற்றும் உபகரணங்களை வழங்கும் தரக்குறியீடான OPPO வின் கையடக்க தொலைபேசியாக அமைவதோடு, இலங்கையர்களுக்கும் இப்போது OPPO வில் காணப்படும் அனைத்து சிறந்த அம்சங்களையும் கொண்ட 'பட்ஜட்' இற்குள் அமையும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 

ரூபா 20,000இற்கும் குறைவான சந்தைப் பெறுமதியில் ஸ்மார்ட்போன் ஒன்றை வழங்குவது என்பது இலங்கை மொபைல் போன் சந்தையில் ஒரு சவாலான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என்பதோடு, இது நாட்டில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்கான புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கையாக அமையவுள்ளது. A1k கையடக்க தொலைபேசியானது, 4000mAh மின்கலத்தை கொண்டுள்ளதுடன், இப்பிரிவில் இது முன்னணி இடத்தை வகிக்கின்றது. சார்ஜ் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் (சுமார் 17மணிநேரம்) பயன்படுத்துவதை இது உறுதி செய்கிறது. ‘Bigger Memory’ எனும் பெருமை கொண்ட இத்தொலைபேசி, 32GB ROM மற்றும் 256GB வரை அதிகரிக்கப்படக்கூடிய நினைவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. A1K ஆனது, உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தரவுகளுக்கான பெரிய சேமிப்பகத்தை கொண்டுள்ளது. OPPO A1K ஆனது 6.1அங்குல HD+ திரையுடன் வருகிறது. இது, வீடியோக்களைப் பார்க்கும்போது அல்லது கேம்களை விளையாடும்போது சிறப்பான அனுபவத்தை பெற வழிவகுக்கிறது. Corning Gorilla Glass 3திரை ஆனது திரையின் உறுதித்தன்மையை மேலும் மேம்படுத்துகிறது. 

OPPO A1K தொலைபேசி, மெட் (matte) மேற்பரப்புடன் எளிய வடிவமைப்போடு, கையில் பிடிப்பதற்கு இலகுவான வகையில் நேர்த்தியாக அமைகிறது. இது வெற்று பின்புற பெனலைக் கொண்டுள்ளது. அது மிகவும் கடினமானதும் உடைக்க முடியாத வகையிலும் அமைந்துள்ளதுடன், கைரேகைகள் காரணமான அடையாளங்கள் இதில் பதியாது.

Comments