எல்லை இல்லாதது | தினகரன் வாரமஞ்சரி

எல்லை இல்லாதது

அன்பு எனும் சொல்
எம் தாயவளின் அன்பே
நெஞ்சமதில் கொடிப்படர்ந்து
முதல் முடிவாய் மேன்மை தரும்
பெற்ற தாய் அவளே
முதன்மை ஆம் முதல்
எனும் சொல்லினுக்கமைந்த
உலகினுக்கே ஓர்
மகா சக்தியுமாம்
இச்சொல் எவர் செவி
சேர்தலும் ஏன்
இதை கருதி சொன்னாய்
எனும் கேள்வி கேட்டால்
எவர்க்கும் எக்காலமுமே
வாழ்வில் அவர்
உய்யவாறு முடியுமோ?
நம்மை பத்து மாதம் வயிற்றில்
சுமந்திருந்து பெற்ற அன்னையவள்
சக்திக்கு நிகர் மற்றுமோர்
மகா சக்தி இவ்வுலகில்
நாம் அறியவும் அறிந்ததுமாய்
வேறுண்டோ சொல்லுதி
மாரியில் கிடைக்கும்
மழையின் குளிர்ச்சி
அவளன்புக்கு சரிநிகரோ
அடித்தலும் இடித்தலுமாய்
வான் முழங்க மனம் இடித்து
உடைந்து ஏங்கி என் பிள்ளை
என் பிள்ளை என்றவள்
மார்போடெம்மை கட்டி
உடனே அணைத்திட்டளே
அந்த பாசத்தின் சூடான இதம் தானே
நாம் முதன் முதலில் அறிந்தோம்
கண்ணினை காக்கின்ற
இமைபோல எமை காத்து
அன்று அளந்த அளவென்று இலாது
பசித்து அழும் போதெல்லாம் பாலமுது ஊட்டி
செய் தவத்தினால் நான் பெற்ற என் பிள்ளை
என தவழ்ந்து வரும் போதும்
கைகளை நீட்டி தூக்கி
இடுப்பிலிட்டு நிலா காட்டி
உண்ண சோறு ஊட்டி
இனிதே உண்டான பின்பு
அழுகுரல் பிறக்க
தேனின் மொழியாய்
சொற்கள் அமுதில் அள்ளி
உற்ற தன் தாலாட்டு இசையாலே
செவி நிறைத்து தூங்கச் செய்து
நாம் பொன் சேர்க்கும் இக்
காலத்தின் முன்பாகவே
எம் மென் கால்களிலே
கைகளிலே வளையலிட்டு
பார்த்து மனம் குவித்து இரசித்து
வளர்ந்திடவும் பள்ளிக்கனுப்பி
நன்மை பெறும் கல்வி எல்லாம்
கற்றிட வைத்து ஆளாக்கி
உண்மை நிற்கும் நெஞ்சினனாய்
நின்ற நிலையில் வாழவும் செய்து
ஆனது அனைத்தும் எமக்கென்றே
அளித்த எம் தாயவளின் சந்திர வதனம்
சித்திரை முழு நிலா தேய்ந்திடினும்
ஒளிர் விஞ்சும் முழு நிலவாய்
எம் வாழ்வின் எல்லை காண்பளவும்
நிலை நிறக்குமன்றோ
அழியாதே மனதில் என்றும்

நீ பி அருளானந்தம்

Comments