கொரோனாவுடன் வாழ்வோம் | தினகரன் வாரமஞ்சரி

கொரோனாவுடன் வாழ்வோம்

நம் நாட்டில்
கொரோனா எனும்
கொடிய நோயை
முதன் முதலாய் கண்டபோது
ஊரடங்குபோட்டார்கள்
அல்லோல கல்லோலம்

ஆளையாள் முந்திக்கொண்டு
பொருட் கொள்வனவு செய்தார்கள்
இப்போது எம் நாட்டில்
எழுபதாயிரத்தை
எட்டி நிற்கிறது

தொற்றிவரும் கொரோனா
ஆனால் எங்களுக்கோ
எல்லாம் வழமைதான்
பழகுங்கள் பழகுங்கள்
கொடிய கொரோனாவுடன்

வாழப் பழகுங்கள்
வேலை இல்லாமல்
வெளியில் போக வேண்டாம்
மறக்க வேண்டாம்
முகக் கவசம் முக்கியம்

அடிக்கடி கைகளை
அலசிக் கழுவ வேண்டும்
ஒரு மீற்றர் இடைவெளியை
ஒவ்வொருவரும் கடைப்பிடித்து
கைகூப்பி வணங்குகள்
கைகுலுக்க வேண்டாம்
கூட்டமாய் நிற்க வேண்டாம்
கூட்டங்களும் போட வேண்டாம்
ஆவி பிடியுங்கள்
அடிக்கடி சுடுநீர் குடியுங்கள்
அப்பப்போ

சுகாதாரத் துறையினரின்
அறிவுரையைக் கேளுங்கள்
வாழலாலம் நாம் கொரோவுடன்
பழகி வாழலாம்

சீ. ரவீந்திரன், களுவாஞ்சிகுடி

Comments