அந்த நாளுக்கான காத்திருப்பு | தினகரன் வாரமஞ்சரி

அந்த நாளுக்கான காத்திருப்பு

தனது இணை பிரிந்து ஆண்டுகள் பல
தன்னாலே கடப்பதை அவன் அறிவான்
அவன் உறங்கும் அறையின் வெளியில்
தவளைகளும் பூச்சிகளும் ஒலிஎழுப்பின!

வீட்டினுள்ளே அறைக்கடிகாரம்
‘டிக்டிக்’கென நிசப்பத்தம் உருவாக்கியது
கடுமையான மழைகாற்று
ஓ! என பெய்ந்தவண்ணமிருந்து

குளிருக்கு முணுங்கும் அந்தநாய்
குளிரால் நடுநடுங்குவது புரிந்தது
இரவில் இரைக்காய் அலையும்
காட்டுப்பன்றிகள் புறுபுறுத்தன!
இணைதேடிடும் பூனைகள்
இரவை அவல நிலைக்குள்ளாக்கியது

அடுத்த வீட்டு ஆஸ்த்துமா தாத்தா
ஆ... ஆ... என்பது கேட்கின்றது!
அந்தப் பெரிய வீட்டின் மூலையின்
ஓர் ஓரத்தில் நாளை எதிர்பார்த்து
நாளை கூத்துகிறது ஒரு மனிதம்

மொழிவரதன்

Comments