நிஜங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நிஜங்கள்

தரிசிக்கும் ஒவ்வொரு கணமும்
தகுமான வாழ்வு தவமாகிறது
இயற்கையின் மாற்றங்கள், தாக்கங்கள்
நிஜங்களின் மொழி பகர்ந்து
நிறைவாழ்வின் நிதர்சனம் காட்டும்

வாழ்வின் வடிவங்களை வண்ணமாக்கும்
ஆழமான கருத்துக்களை அழகாக்கும்
வாசித்தலிலும், நேசித்தலிலும்
மனிதவியல் ஒளிரும்,
நிஜங்களை சுவாசிக்கும் வேளை,

உயிர்ப்பின் மேன்மையை,
உலகம் சிலாகிக்கும்
வரையும் கோட்டுக்குள்
வரைவிலக்கணம் சொல்லும் நிஜப்பாதை
மனஅமைதி, ஆளுமையின் மூச்சாகிடும்,

உயிராக, உறுதியாகப்பற்றி
நியாயத்தை நிலைநிறுத்துபவன்,
ஆரோக்கிய பலத்தை
அம்சமாகப் பெறுகிறான்
நிஜங்கள் முன் நீ தோற்றுப் போனாலும்,
உனை ஒருபோதும், தோற்கடிப்பதில்லை நிஜங்கள்

உயர்விலும், தாழ்விலும்
வலுவான மொழியை உச்சாடனம் செய்பவன்
மானில மூச்சின் பேச்சாகிறான்

பாஹிரா, 
பதுளை.

Comments