விவசாயிகளுடன் முன்னோக்கிச் செல்லும் DPGV | தினகரன் வாரமஞ்சரி

விவசாயிகளுடன் முன்னோக்கிச் செல்லும் DPGV

தேசிய விவசாயத்தை ஊக்குவித்து நாட்டின் விவசாய அறுவடை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை உலகம் முழுவதிலும் பிரசாரப்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் (பிரைவட்) லிமிடட் (DPGV) இதுவரையில் இந்நாட்டு விவசாயிகள் மாத்திரமன்றி வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை வென்றுள்ளது.

டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பினராக இந்நாட்டின் சகல மட்டத்தில் உள்ள மக்களையும் நெருங்கிச் செல்லும் வகையில் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ள விவசாய பிரதிநிதிகளின் வலையமைப்பை அமைப்பதற்கு டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனத்துக்கு முடிந்துள்ளது.

இயற்கை விவசாயத்தை முன்னணியாகக் கொண்ட இந்தப் பயணத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது விளைச்சல்களுக்குத் தேவையான அறிவு வழங்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் அறுவடைகளை சிறந்த விலையில் கொள்வனவு செய்வதன் ஊடாக விவசாயத்துக்கு புதியதொரு பலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும், எதிர்கால விவசாய சந்ததியினர் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக விவாசயம் செய்வதற்கும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் மேலதிக உற்பத்திகளைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி பெறுமதி சேர் உணவு உற்பத்திகள் பலவற்றை DPGV ஏற்கனவே சந்தைக்கு வழங்கியுள்ளது.

தேசிய விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் அறுவடையை முன்னிலையாகக் கொண்டு இயற்கை மஞ்சள் பசை, காய்ந்த இயற்கை உணவு உற்பத்திகள், வாசனைத் திரவியங்கள், பல்வேறு தேசிய மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை பழ இரசம் போன்ற பல உற்பத்திகளை டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது. கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக தமது உற்பத்திகளை விநியோகித்து சர்வதேச சந்தையில் நற்பெயரையும் பெற்றுள்ளது.

அத்துடன், தேசிய விவசாயிகளின் உற்பத்திகளுக்குத் தேவையான சான்றிதழ்படுத்தல் நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்றுக்கொண்டு சர்வதேச சந்தைக்கு அந்த உற்பத்திகளை அனுப்புவதற்கான பின்னணிகளும் டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் ஊடாக விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமது உற்பத்திகளை தேசிய சந்தைக்கு வழங்கும் பிரதான விற்பனை நிலையமாக டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் ஊடாக பத்தரமுல்லை பன்னிப்பிட்டிய வீதியில் Glo Shop & Cafe அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Glo Shop & Cafe இற்கு 100ற்கும் அதிகமான உள்நாட்டு விநியோகஸ்தர்கள் தமது உற்பத்திகளை வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான உணவுகள், விசேடமாக தனித்துவமான உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

அது மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி காட்சியறைகளிலும், அசெட்லைன் லீசிங் கிளைகளிலும் அமைக்கப்பட்டுள்ள னுPபு யுபசi ரூ குயசஅ ளூழி  களிலும் இந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

இலங்கையில் உள்ள முன்னணி குழும கம்பனியான டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய டி.பி குளோபல் வெஞ்சர்ஸ் எப்பொழுதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதாரணமாக, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதற்குத் தேவையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அசெடலைன் லீசிங் கம்பனி லிமிடட் ஊடாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை குழுமத்தின் ஏனைய நிறுவனங்களில் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கான இணைப்புக்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும்.

அத்துடன், Fair Trade Certification நடவடிக்கையின் ஊடாக விவசாயிகளின் விளைச்சல்களுக்கு உரிய விலையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன், இது தொடர்பில் விவசாயிகளைப் பதிவுசெய்வதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் DPGV தயாரிப்புகளை மேலும் மேம்படுத்துவதே நாளைய நோக்கமாகும்.

நாட்டில் ஒரு பெருமைமிக்க விவசாய பொருளாதாரம் மீண்டும் தோன்றுவதுடன், இலங்கை விவசாயத்தை புதிய தலைமுறையாக மாற்றுவதே இதன் இறுதி நோக்கமாகும். அதே நேரத்தில், இந்த நாட்டு மக்களுக்கு தமது சொந்த நிலத்தில் விஷமற்ற அறுவடையை அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

Comments