இணைந்து வாழ வாருங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இணைந்து வாழ வாருங்கள்

உலகில் உள்ள
உயிர் உடல்களே!
உங்களில் மிக
இரக்க மனம்
இருப்பவனாகவே
இருக்கின்றேன் நான்...

உலகில் உள்ள
உயிர்கள் எல்லாம்
இறைவனது படைப்பு
இறைவனை எவர்
விசுவாசத்தாலும் அவர்
அன்பு செய்வார்....

உங்களில் கொடியவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
அப்படியானவர்கள்
என்னிடம் வரவேண்டாம்
என்னைக் கடிக்க வரும்
உன்னை அடிக்க வரும்...

கெட்டவரெல்லாம் நில்லுங்கள்,
நல்லவரெல்லாம் வாருங்கள்
உயிரான அன்போடு
உறவான நட்போடு
இறையவன் வழியாக
இணைந்து வாழ வாருங்கள்!

பாண்டியூர் பொன். நவநீதன்

Comments