தரணியில் இணை உண்டோ தாய்க்கு! | தினகரன் வாரமஞ்சரி

தரணியில் இணை உண்டோ தாய்க்கு!

கருவில் சுமந்து கஷ்டங்கள்
களைந்து மடியில் சுமந்து மனதை வருடி
நாளொருமேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளர்த்து
கண்கொட்டாமல் கண்மலரவைத்தாள்
கண்ணே பொன்னே என பாராட்டி சீராட்டி
பாலூட்டி நீராட்டி தாலாட்டி எனை வளர்த்தாய்
தலைநிமிர்ந்து நான்வாழ
தன்னுயிரை துச்சமென எண்ணி
தினம்தினம் உழைத்து உருமாறி போனவள்
உலக அழகிகள்கூட தோற்றுப்போவர்
என்தாயவள் அழகின்முன்
நீண்டுவளர்ந்த கூந்தல்
மின்னல் வெட்டும் அவள் கண்கள்
நொடிக்கு நொடி முத்தமிடும்
செவ்வண்ண இதழ்கள்
சேர்த்தணைக்கும் இருகைகள்
செப்பினால் சொற்கள் காணாது
எங்கே சென்று கடன்பெறுவேன்
அவள் அழகை வர்ணிப்பதற்கு
விடைதெரியா புதிரவள்
விண்வெளியில் தேடினாலும்
கிடையாது இன்னொன்று
அரிய பொக்கிஷத்தை
அநாதை இல்லங்களில் விடும்
சில காட்டு மிராண்டியையும்
காடையர்களையும் கருவுற்று
பெற்றவளும் இத் தாய்தான்
தாய்க்கு இணையுண்டோ இத்தரணியில்

சுந்தரராஜ் சுபாஷினி,
வோல்ட்றிம் லிந்துல.

Comments