நோன்புப் பெருநாள் | தினகரன் வாரமஞ்சரி

நோன்புப் பெருநாள்

தவமாய் தவமிருந்து முப்பது நாள் நோன்பு நேற்று
தான் கண்ட இன்பமதை குதூகலமாய் கொண்டாட
தரணி எங்கும் ஒலிக்கிறதாம் தக்பீர் முழக்கம்
தரம் வாய்ந்த நாள் அதுவாம் நோன்புப் பெருநாள்

முதல், இரண்டாம் ரக்அத்கள் முறையே ஏழு, ஐந்து என தக்பீர்
சொல்லி நிறைவேறுமே பெருநாள் தொழுகை
அதில் கலந்து கொண்டால் அது நீ பெற்ற பேறு
அதை உலகத்தார்க்கு நீயும் எடுத்துக் கூறு

பெருநாளை சிறப்பேற்றும் ஈகையாம்
‘ஸகாத்துல் பித்ர்’ எனும் கொடை அதுவாம்
உரிய நேரத்திற்கு அது நிறைவேற்றுவதை யதார்த்தம்
அதில் விளங்குமே நோன்புப் பெருநாளின் அர்த்தம்

சின்னஞ் சிறார்கள் முதல் பென்னம் பெரியார் வரை
புத்தாடை அணிந்து வீசுமே புது வசந்தம்
அறு சுவையுடன் ஜொலிக்கும் விருந்து
உற்றார், உறவினர், அண்டை அயலவர் என சிறக்கும் விருந்தோம்பல்

ஈகைத் திருநாளின் இதயம் சொல்லும் அருள் வாக்கு
தொழுகையை நிறைவேற்றுவோம் இறையருள் பெற்றிடுவோம்
இதயம் பெறுகின்றதே பரிசுத்தம
அதில் யாரும் உணர்வர் இறை அச்சம்

றுசைனா ஹாசீம்
அக்கரைப்பற்று-02

Comments