‘Aluth Avurudu’ Recipe Challenge 2021 இனை வெற்றிகரமாக நிறைவு செய்த Pelwatte Dairy | தினகரன் வாரமஞ்சரி

‘Aluth Avurudu’ Recipe Challenge 2021 இனை வெற்றிகரமாக நிறைவு செய்த Pelwatte Dairy

Pelwatte Dairy Industries, தமது நுகர்வோரின் இல்லங்களுக்கு உற்சாகத்தை அள்ளி வழங்கும், பருவகால சமூக ஊடக சவாலான ‘Pelwatte Aluth Avurudu Recipe Challenge’ ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சவாலானது Facebook மற்றும் Instagram இல் முன்னெடுக்கப்பட்டதுடன், Pelwatte இன் பரந்த தயாரிப்பு வகைகளை உபயோகித்து தயாரிக்கப்பட்ட பருவகாலத்தின் சுவையான உணவுகளின் புகைப்படங்களையும், உணவு தயாரிப்பு செய்முறையையும் பகிர்ந்துகொள்ளுமாறு நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2021 ஏப்ரல் 1 முதல் 20 வரை முன்னெடுக்கப்பட்ட இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட பருவகால சுவையான தின்பண்டங்கள், உணவுகள் மற்றும் குடிபானங்களின் செய்முறைகள் பெருமகிழ்ச்சியுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பங்கேற்பாளர்கள் இந்த அறிவிப்பு தொடர்பான பதிவின் கருத்துகள் பிரிவில் தங்களது சுவையான உணவு வகை மற்றும் அதன் செய்முறையை பதிவதன் மூலமோ, அதை நேரடியாக பக்கத்திற்கு அனுப்புவதன் மூலமாகவோ அல்லது அவர்களின் வோலில் பதிவதுடன் பக்கத்தையும் ஹேஸ்டேக்கையும் குறிப்பிடுவதன் மூலமோ சவாலில் பங்கேற்க முடிந்தது. அனைவரும் #pelwatte recipe2021 என்ற ஹேஸ்டெக்கின் ஊடாக அனைத்து உணவு செய்முறையையும் பார்வையிட முடியும். இந்த சவாலானது புத்தாண்டு பருவகாலத்தின் அழகை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்ததுடன், வீடுகளில் சிறப்பாக சமையல் மேற்கொள்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமன்றி நல்ல உறவுமுறை மற்றும் தொடர்புகளையும் ஏற்படுத்தியது. மேலும் உணவு, தயாரிப்பு மற்றும் அதன் காட்சிப்படுத்தல் தொடர்பான அவர்களின் சொந்த ஆக்கபூர்வமான யோசனைகளையும் வெளிக்கொண்டு வந்தது.

புத்தாண்டு என்பது நல்ல வாழ்த்துக்கள் நிறைந்த சூழல், சௌபாக்கிய எண்ணங்கள், புதுப்பிக்கப்பட்ட உறவுகளின் தருணங்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடான நாட்கள், பழையவற்றை ஞாபகமூட்டும் உணவு மற்றும் இனிப்புகள் ஆகியவற்றினைக் கொண்ட காலப்பகுதியாகும் இந்த தொற்றுநோய் நிலைமையானது ஒன்று கூடுவதையும், நேரடித் தொடர்புகளையும் சவாலுக்குட்படுத்திய போதிலும் இந்த பருவகாலத்தின் ஊக்கம் மாறவில்லை

Comments