காலவதியான டயர்களினால் அதிகரித்துள்ள ஆபத்து | தினகரன் வாரமஞ்சரி

காலவதியான டயர்களினால் அதிகரித்துள்ள ஆபத்து

இலங்கையில் டயர்களுக்கான சந்தை குறிப்பாக பயணிகள் கார் ரேடியல் அல்லது PCR பெரும்பாலும் இறக்குமதியில் தங்கியிருப்பதால் கடந்த இரண்டு வருடங்களாக தட்டுப்பாடு காணப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியினால் ஈடுசெய்ய முடியாதளவு ஏறத்தாழ 1 மில்லியனுக்கான வருடாந்த தேவை காணப்படும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இறக்குமதித் தடையின் காரணமாக இத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நாட்டின் பாரிய உற்பத்தியாளரான CEAT வருடமொன்றுக்கு 500,000 உற்பத்திகளையே மேற்கொண்டுள்ளது. வேறெந்த தெரிவும் இல்லாமல் சந்தையை கைவிட்டுள்ளது. ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்ட ஏனைய உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து டயர்களைப் பெற்றுக் கொள்வதே மிகவும் சாத்தியமாக தேர்வாக அமையும்.

இருந்தபோதும், ஒழுங்குமறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வலுமையான தடைகள் என்பதை நிரூபித்துள்ளன. உதாரணமாக, ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் டயர்கள் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகையாக, வரி விலக்கு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இது உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்துபவர்களைவிட முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் இணைந்த தொழில்சாலைகளுக்கு போட்டித் தன்மையை வழங்குகின்றது. எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டால், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்வரை குறுகிய காலத்தில் டயர் தட்டுப்பாட்டைத் தணிக்க முடியும்.

பயணிகள் கார் டேடியல்கள் விரைவில் தேய்வடைந்து விடுவதுடன், பாதிப்படைந்த டயர்கள் புதிய உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லையென்பதால் அண்மைக் காலமாக டயருடன் தொடர்பான விபத்துக்கள் அதிகரித்துள்ளன. நாம் தற்பொழுது மேலும் பல அதிவேக நெடுஞ்சாலைகளைக் கொண்டிருக்கின்றோம், உதாரணமாக கட்டுநாயக்க முதல் மத்தளை வரை நீண்டதூரத்தைக் கூறமுடியும். அதிக வேகம் மற்றும் அதிகரிக்கப்பட்டுள்ள பயண நேரம் டயர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளின் மருங்குகளில் தேய்வடைந்த டயர்களுடன் வாகனங்கள் நிற்பதும், டயர்கள் வெடித்து கட்டுப்பாடிழந்து நிற்பதும் அசாதாரணமான காட்சிகள் அல்ல. அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த கார்கள் மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களின் டயர்கள் வெடித்த பல சம்பவங்களை இந்தக் கட்டுரையாளர் கண்ணுற்றுள்ளார். தேய்ந்துபோன டயர்களுடன் செல்வது ஆபத்தானது என்பதை வாகன ஓட்டிகள் நன்கு அறிந்திருந்தாலும் பல நகரங்களில் பொருத்தமான டயர்கள் கிடைக்காத காரணத்தினால் இறுதிவரை அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

மக்களுக்குப் பெரிதும் தெரியாத மற்றுமொரு விடயம் டயர்களுக்கு காணப்படும் காலவதியாகும் திகதி. டயர்கள் தினசரி நடைபாதையைத் தாக்கினாலும் அல்லது இருண்ட, குளிர்ந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்திருப்பதை கவனத்தில் கொள்ளாமையாலேயே டயர்கள் பழுதடைகின்றன. எனவே டயர்களுக்கு காலவதி திகதி உள்ளது. காலவதியாகும் திகதி டயர்களின் ஓரங்களில் நான்கு இலக்கங்களைக் கொண்டதாகவிருக்கும். முதல் இரண்டு இலக்கங்கள் உற்பத்தி செய்த வாரத்தையும், இறுதி இரண்டு இலக்கங்களும் உற்பத்தி வருடததையும் குறிக்கும். 2020ஆம் ஆண்டு நான்காவது வாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட டயர் 0420 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரு வருடத்துக்குக் குறைவான காலத்தைக் கொண்ட புதிய டயர்களைக் கொள்வனவு செய்வதே சிறந்த நடைமுறையாகும் என்பதுடன், இலங்கையின் வெப்பமண்டல நிலைமைகள் காரணமாக உங்கள் டயர்களின் காலாவதி திகதியிலிருந்து ஆறு வருடங்களை அடைந்தவுடன் அவற்றை மாற்றுவது பற்றிக் கவனம் செலுத்துங்கள். இருந்தபோதும், விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட டயர்கள் 2017 அல்லது 2018 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாவுள்ளது. அதாவது அவற்றின் வாழ்நாளில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டாலும், பற்றாக்குறை காரணமாக மாற்றுவழி இன்றி அவற்றை பயனர்கள் கொள்வனவு செய்கின்றனர். காலவதியாகாத டயர்களில் ஓடுவதன் ஊடாக சோகங்களை பகுதியளவில் தவிர்க்க முடியும், ஃபாஸ்ட் அன்ட் பியூரியன் நடிகர் போல் வோல்கருக்கும் நிகழ்ததும் இதுவே. ஆறு வருடங்களின் பின்னர் டயர்கள் சிறப்பதானதாகக் காணப்பட்டாலும் ஆறு வருடங்களில் மாற்றுவதற்கு மறக்க வேண்டாம், சிதைவுகள் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம்!

‘இலங்கை டயர் சந்தை எதிர்வுகூறல் மற்றும் வாய்ப்புக்கள் 2021’என்ற TechSci ஆய்வு அறிக்கைக்கு அமைய இலங்கையின் டயர் சந்தை 2016- முதல் 2021 வரையில் CAGR 12.59% உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. உயரும் இரு சக்கர வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி தேவை, ஆட்டோமொபைல் விரிவாக்கம் மற்றும் சாதகமான நிதிக் கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாக சந்தையில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது: “நிலையான வணிகச் சூழல், சிறந்த பொருளாதார நிலைமைகள், குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பது மற்றும் நாட்டில் விகிதத்தில் மோட்டார்மயமாக்கல் ஆகியவற்றின் ஆதரவுடன் வாகனத் தொழில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டயர்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இங்குதான் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான தலையீடு தேவைப்படலாம். இருப்பினும், வழக்கமாக, ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் டயர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கும், குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் உள்ளூர் சந்தையைபூர்த்தி செய்யவில்லை என்றாலும், சில வழிமுறைகளை அறிமுகப்படுத்த முடியும், இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்களில் ஒரு சதவீதம் உள்ளூர் சந்தையில் நுழையாமல் ஏற்கனவே சந்தையில் உள்ளவர்களை குலைத்தல் அல்லது ஊக்கப்படுத்துதல் என்பதற்கு மாற்றாக அவர்களின் சுமையை குறைக்க ஒரு வழிமுறையாகும். இது இறுதி பயனருக்கு ஒரு நன்மையாக இருக்கும், ஏனெனில் இறக்குமதிக்காக தயாரிக்கப்படும் டயர்கள் பொதுவாக உள்ளூர் மட்டுமல்ல, சர்வதேச தரங்களையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கின்றன. அசாதாரண சூழ்நிலைகள் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுகின்றன. இதுபோன்ற நேரத்தில் இறக்குமதி இயல்பாக்கும் வரை, இது எதிர்காலத்தில் தெளிவாகத் தெரியவில்லை, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கூறியவை போன்ற சாத்தியக்கூறுகள் மற்றும் தெரிவுகளை அரசாங்கம் கவனத்தில் கொள்வது விவேகமானதாக இருக்கலாம்..

அஷராக் வஹாப்

Comments