உன் விழியினிலே | தினகரன் வாரமஞ்சரி

உன் விழியினிலே

இல்லறத்தில் இருவராய் இணைந்து
இன்னல்கள் சுமந்து இம்மையில்
நம்மை ஈன்றெடுத்த பெற்றோர்
இவ்வுலகில் எமக்குத் தியாகிகள்
பசித்திருந்து விழித்திருந்து தினம்
பகலிரவாய் கண் விழித்து
நம் பசிபோக்கநாலெல்லாம்
பாடுபடும் அன்புத் தியாகிகள்
துன்பத்தை தலைலையிலே சுமந்து
தோழிலே நம்மைச் சுமந்து
துயர் தெரியாமல் நம்மை
வளர்க்கும் உண்மைத் தியாகிகள்
தள்ளாதவயதிலும் நமக்காக
தளராத மனஉறுதியோடு
தனித்திருந்து விழித்திருந்து பிரார்த்தனை
செய்யும் நம்முயிர் தியாகிகள்
உயிர் உள்ளவரை
பெற்றோரை பேணிக்காத்து அவர்கள்
உள்ளம் மகிழ தினம்
உறுதிகொள்வோம்; உண்மையாய்
உன் விழியினிலே
விழித்தது
என் விழிகள்
விழித்ததும்
வியந்தது
என் இருவிழிகள்
வியந்ததும்
இமை மூட மறுக்கின்றது
என் விழிகள்
இமை மூட மறுத்தும்
பேசுகின்றது
என் விழிகள்
பேசியும்
மௌனமாகின்றது
உன் விழிகள்
மௌனமாகியும்
பேசுகின்றது
நம் விழிகள்
என் விழிகளில்
மொழி பேசுகின்றது
உன் விழிகள்
கவிதையில் காதல்
வரைகின்றது
என் விழிகள்
காதலில் வலிகள்
கொடுக்கின்றது
உன் விழிகள்
வலியினில்
உன் நினைவு
தருவது
உன் விழிகள்
உன் நினைவில் கவிதை
பேசுகின்றது
என் விழிகள்
கவிதையில் என் பேனா
சொல்கின்றது
உன் விழிகள்
உன் விழிகளின்
படைப்பதத்தான்
உன் விழியினிலே

என். பாரத்,
மானிப்பாய்

Comments