சுகாதாரத்துறையால் கவனிக்கப்படாத சிறிய, நடுத்தர தனியார் வைத்தியசாலைகள்? | தினகரன் வாரமஞ்சரி

சுகாதாரத்துறையால் கவனிக்கப்படாத சிறிய, நடுத்தர தனியார் வைத்தியசாலைகள்?

சிறிய மற்றும் நடுத்தர (SME) தனியார் மருத்துவமனைகள் இலங்கையின் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் பதிவு செய்யப்பட்ட 250 தனியார் மருத்துவமனைகளில் 90% க்கும் மேற்பட்டவை சிறிய மற்றும் நடுதத்தர மருத்துவமனைகளாகும். இந்த மருத்துவமனைகள் வெளிநோயாளர் பிரிவு சிகிச்சையின் 60% ஐ பூர்த்தி செய்கின்றன, சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன, மேலும் முக்கியமாக, தரமான சுகாதாரத்துக்கான பரந்த அணுகலை உறுதி செய்கின்றன.

COVID-19 தொற்றுநோயை நாடு எதிர்த்துப் போராடுகையில், பெரும்பாலான SME மருத்துவமனைகள் தனிப்பட்ட விதமாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றன, அவை மக்கள் வருகையின் வீழ்ச்சி மற்றும் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அதிகான செலவுகளும் ஏற்படுகின்றன. இது பண நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது, சில வழங்குநர்கள் தங்கள் வர்த்தகங்களை அளவிடு செய்வதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுநோயின் போது SMEகளின் பங்கு
மேல் மாகாணத்தில் தொற்றுநோயால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டதனால் ‘வெஸ்டர்ன் ஹாஸ்பிடல்’ போன்ற பல SME மருத்துவமனைகள் தொற்றுநோயால் அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தை உணர்ந்திருக்கின்றன.

“தொற்றுநோய் ஆரம்பமாகியதிலிருந்து எங்கள் மருத்துவமனையில் 40%ஆல் மக்களின் வருகையில் வீழ்ச்சியைக் கண்டோம். நாங்கள் மாதத்திற்கு 2000 நோயாளிகளைப் பராமரிப்போம், அவர்களில் சிலர் வழக்கமான சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையை நம்பியிருக்கிறார்கள்,” என மேல் மாகாண மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஒமர் ஷெரிப் தெரிவித்தார்.COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகையில், மருத்துவமனை அதன் பல வார்ட்டுகள் மற்றும் நர்சிங் விடுதிகளை தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் பிரிவுகளாக மாற்றியுள்ளது.

“எங்கள் ஊழியர்களிக் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், ஆனால் இதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. எங்கள் ஊழியர்களும் முன் நின்று செயற்படுவதால் அரசாங்கம் SME களுக்கு சலுகை விகிதத்தில் PPE வழங்கும் வடிவத்தில் ஆதரவை வழங்குவதன் மூலமும், தனியார் மருத்துவமனைகளில் இருந்து COVID-19 தொற்றாளர்களை அரசு சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல உதவுவதன் மூலமும் உதவிகளை செய்ய முடியும்.”

நிதி உதவி மற்றும் திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை
அவிசாவளையிலுள்ள கோமஸ் தனியார் மருத்துவமனை, பல SME மருத்துவமனைகளைப் போலவே, கொவிட் தொற்றுநோய் காலத்தின் போது மருத்துவ உபகரணங்களில் அதிக முதலீடுகளைச் சமாளித்தல் மற்றும் திறமையான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம், போன்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. இப்பகுதியில் முன்னோடி தனியார் சுகாதார மருத்துவமனையாக, குறைந்த பட்சம் 30-40% பேர் கோமஸ் மருத்துவமனையிலிருந்து மருத்துவ சிகிச்சை சேவைகளைப் பெறுகின்றனர்.

“மக்கள் தனியார் மருத்துவமனைகள் என்று கூறும்போது, அவர்கள் எப்போதும் சில பெரிய மருத்துவமனைகளைப் போலவே பார்ப்பார்கள். எவ்வாறாயினும், தனியார் சுகாதாரத் துறையின் பெரும்பாலான பகுதி SME மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது, மேலும் தேசிய சுகாதார கட்டமைப்பிற்கு நாங்கள் அளிக்கும் ஆதரவு பாராட்டப்படாமல் போகிறது” என கோமஸ் மருத்துவமனையின் நிர்வாகப் பணிப்பாளரும் பணிப்பாளருமான டொக்டர் சந்தமாலி வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

Comments