கண்ணீரைத் துடைத்துவிடு! | தினகரன் வாரமஞ்சரி

கண்ணீரைத் துடைத்துவிடு!

கன்னியவள் வாழ்வில் இருள் சூழ
கவலைகள் நெஞ்சில் நிறைந்திருக்க
காலம் முழுவதும் தவிக்கின்றாள்
கணிவே இன்றி விழிக்கின்றாள்!

வளரும் மரம் போல் அவள் வயது
வளர்ந்து நிதமும் தீண்டுவதால்
வாடி வதங்கும் மலராக
வாட்டத்தோடு வாழ்கின்றாள்!

உறவுகள் ஆயிரம் இருந்த போதும்
உதயம் காண முடியாமல்
உள்ளம் குமுறி அழுகின்றாள்
உருகி நித்தம் மடிகின்றாள்!

சித்தம் குளிர நித்தம் அவள்
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்திடவே
சதாவும் ஆசைப் படுகின்றாள்
சுதந்திரம் காண துடிக்கின்றாள்!

பாவம் அவளின் வாழ்க்கையோ
பாரில் வீணாய் கழிகிறதே
போரில் மாட்டிக் கொண்டவள் போல்
பரவசமின்றி வாழ்கின்றாள்!

பாரில் இதுபோல் கன்னியர்கள்
பார்ப்பர் அற்ற நிலையோடு
பாவம் இறைவா மனம் இறங்கி
பார்த்து கண்ணீரைத் துடைத்து விடு!


 

Comments