ஓடமும் துடுப்பும் | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

ஓடமும் துடுப்பும்

அவசர  அவசரமாய் ஆயத்தமாகின்றான் சுந்தர்.... நேரம் காலை எட்டு இருபதாயிற்று..  எப்படியாவது இன்னும் இருபது நிமிடத்திற்குள் ஆபீஸுக்கு சென்றாக வேண்டும்..  இன்று திங்கட்கிழமை.. போர்வையை இழுத்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த  ஸ்மிதாவை அவசர அவசரமாய் எழுப்பினான்.. அவளும் அரை குறை தூக்கத்துடன்  எழுந்து"ஆபிஸுக்கு டைம் ஆச்சே" என்றாள்.. அவனோ

"ஆமா ஆமா.. சீக்கிரம் எந்திரி..... நீ ஆபீஸுக்கு போகல்ல?"

"நீ தேர்ஸ்டே  என்ன வீட்டுக்கு வர சொல்லும் போதே மன்டே க்கு லீவு போட்டுடன்"

" அடச் சே.. இது தெரிஞ்சிரிந்தா நானும் லீவு போட்டிருப்பேனே"

"சரி நீ போய்ட்டு வாயேன்.."

"போய்ட்டு   வரவா.... ஒடனே கிளம்பு... அஞ்சலி டுடே வாறென்னு சொன்னாள்.. நீ  இருந்தின்னா  சிக்கல் ஆயிறும்.. நான் வாறேன் டைம் ஆச்சு.. ஒனக்கு சாப்பாடு  வாங்கி வச்சிரிக்கன் அத சாப்டு.. தயவு செஞ்சி ப்ளீஸ் ரூம க்ளீன் பண்ணிட்டு  போயேன் ப்ளீஸ்.. "

" சரி.... பண்றன் பண்றன்.. " இயன்றளவு அவளுக்கு ஆலோசனை சொல்லி விட்டு.. சட சடவென்று சொக்ஸும் ஷூவும் அணிந்து வேகமாய்.. படி இறங்கினான்.." அய்யோ.. மறந்துட்டனே" என்று  தலைக்குள் ஒரு எண்ணம் தட்டியது.. உடனே மீண்டும் வேகமாய் படி ஏறினான்...  அங்கு அவளோ உறங்கும் போது உடுத்திருந்த அரை குறையான மெல்லிய ஆடையை களையாமலே  ரூமை துப்புரவு செய்து கொண்டிருந்தாள்...

ஸ்மிதா! ... ஒன்னு சொல்ல மறந்துட்டன்.. திறப்ப பூட்டிட்டு.. கீழ இருக்குற  அக்காகிட்ட குடுத்துட்டு போயிரு"
"சரி சரி.. நீ போயேன், நான் பாத்துக்குறன்" அவள் மீண்டும் வேலையை தொடர்ந்தாள்..ஒரு  சில நிமிடம் அவன் கண்களினால் அவளின் மெல்லிய உடையூடே தெரிந்த  உடற்கட்டில்.. ஒரு உருவப்படம் வரைந்தான்.... அவன் மூளை, அடே முட்டாளே நேரம்  போகிறது என்றுரைக்க.... மீண்டும் ஓடோடிப்போய்  வண்டியை ஸ்டார்ட் பண்ணிஆபீஸுக்கு சென்றான்...

***
மாலை ஜந்து மணியாகிவிட்டது...சுந்தர்,  அவனின் ஆபிஸை விட்டு வெளியேறி அஞ்சலி வரச்சொன்ன பார்க்கிற்கு சென்றான்..  சுந்தரும் அஞ்சலியும் பல வருட காலமாய் காதலிப்பவர்கள்.. இருவருக்கும்  இருவரின் மேல் அலாதிப் பிரியம்.. அவன் அவளை, பெற்ற பிள்ளை போல்  தாங்குவதும்.. அவளும் அவனை தன் மடியில் போட்டுத் தாலாட்டுவதும் என்று அன்பை  மாத்திரம் தாராளமாய் பரிமாறிக் காதலிப்பவர்கள்.. அஞ்சலி மிகவும்  அமைதியானவள். அவளின் குடும்பமும் அப்படித்தான்... இருவரும் ஒரே ஊர்தான்..  படிப்பு மற்றும் உழைப்பின் அவசியத்திற்காய் பட்டணம் வர வேண்டிய தேவை...  சுந்தர், தான் அஞ்சலியை காதலிப்பதாய் தனது அம்மா அப்பாவிடம் சொல்லியும்  எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்..  காரணம், அவள் குடும்பம் அப்படி.. அவளும் அழகானவள்.. அவள் முகத்தைப்  பார்த்தாலே, உலகத்தில் உருவாகும் சாந்தமெல்லாம் இவள் முகத்திலிருந்தே  உருவாகுவது போல் தோன்றும் ஒரு சாந்தமான முகம். அது மட்டுமா நன்றாய்  படித்தவள்.. யுனிவெர்ஸிட்டிலேயே தன்னிலையை முன்னிறுத்தி வைத்திருப்பவள்...சுந்தர்,  சாதாரணமானவன், பிறர் அவனை "மரியாதையான பைய்யன்" என்று போற்றுமளவுக்கு நல்ல  பிள்ளை, வாலிபத்தின் உருப்படி எல்லாம் ஒரு குறையுமே இல்லாமல் முழுமையாய்  வளர்ந்த ஒரு முரட்டுக்காளை. அவன் பாடசாலை படிக்கும் போதே பல பெண்களின் மனதை  ஈர்த்தவன். அவன் இன்ஸ்டாக்ராம் அகௌன்டிற்கு வராத மெஸேஜ்களே இல்லை  இருந்தும் அவன் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் உடனே ப்ளொக் செய்து  விடுவான்.. அவனின் நண்பர்கள் "ஏண்டா இப்டி பன்ற.. அவளா வந்து மடியும் போது  வேணாம் எங்கிறியே"  என்று கூறினால்"இதெல்லாம் தப்புடா.. நாளைக்கு  நமக்கு வரப்போறவள சுத்தமா எதிர்பார்த்தா மட்டும் போதுமா.. நாமளும் அப்டி  இருக்க வேணா" என்று கூறி அவர்களின் வாயை அடைத்து விடுவான். அவனின்  குடும்பமும் சமூகத்தில் நல்ல பெயர் எடுத்த குடும்பம் தான்....  சுந்தருக்கும் அஞ்சலிக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி மூன்று வருடம்.. ஆனால்  அஞ்சலியின் அம்மா அப்பாவின்  வேண்டுகோளிற்கிணங்க அவளின் படிப்பு முடியும்  வரை சேராமல் வைப்பதே சரி என்று கூறி அப்படியே இருந்து விட்டார்கள்....

அஞ்சலி,  அவளும் சுந்தரும் வழமையாக கூடி இருந்து கதைக்கும் இடத்தில் காத்துக்  கொண்டிருந்தாள்.. சுந்தர் அவனது வண்டியை பார்க் செய்து விட்டு  வண்டிச்சாவியை பூட்டிய வண்ணமே அஞ்சலியை பார்த்துப் புன்னகைத்தான்..   அவனை கண்ட ஆனந்தத்தில் அவள் பொன்னிறக்  கன்னங்கள் சிவக்குமளவில்  சிரித்தாள்.... அவன் ஆசையாய் அவள் அருகே வந்து கட்டித்தழுவி நெற்றியில்  முத்தமிட்டான்.... அவள் காதோரம் நழுவிய தலைமுடியை சரி செய்தே அவள் மடியில்  சாய்ந்தான்.... சாயும் போதே அவனின் மனதிற்குள் சஞ்சலம்.. நேற்று இரவு நடந்த  நிகழ்வுகளின் விம்பம் அவன் மனம் எங்கும் உலாவித்திரிந்தது.... அவசரப்பட்டு  இவ்வாறான ஒரு விடயத்தை செய்து விட்டோமே என்று எண்ணி எண்ணியே குற்ற  உணர்ச்சியால் அவன் மனமும் முகமும் குறுகி இருந்தது.. அதையெல்லாம் மறக்க  நினைத்து அவள் முகத்தில் மூழ்க முயன்றான்.. "பேபி, நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க"

அவள் மெல்லிய சிரிப்பில் அவள் உதடு இலேசாய் மலர்ந்தது...."ஐ லவ் யூ பேபி"

"லவ் யூ டூ".....  அவள் கூந்தல் இவன் முகத்தில் வந்து விழுந்தது....

"பேபி நேத்து நான் ஒம் மேல கோபப்பட்டு கத்திட்டேன் அத எல்லாத்தையும் மனசுல வச்சுக்காத டா"

"இல்லடி.. நான் ஏன் உன்னோட கோபப்பட போறேன்".. அவன் கோபப்படவில்லை.. . ஒரு ஆற்றாமையினால் அத் தவறை புரிந்து விட்டான்....

"  நம்ம  சீக்கிரமா சேந்து வாழனும் டி.... இப்படியே எத்துன நாளைக்குத்தான்  நான் பட்டினி கெடக்குறது.. . ஒரு ஆம்பளய..

அதுவும் ஒரு  கணவன.. இப்டி காக்க வக்கிரியே.. ஒன் அப்பா அம்மாட்ட நான் பேசுரன்"..

சுந்தர் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அஞ்சலியின் முகபாவம் எரிச்சலை வரவழைத்தது போல்  மாறியது...
"இங்க  பாரு சுந்தர் நான் ஒங்கிட்ட முன்னமே சொல்லிருக்கன்... என் படிப்பு முடியும்  வரைக்கும் இதுல ஏதும் என் கவனத்த சிதற விட எனக்கு விருப்பமில்ல.. அது  மட்டும் இல்லாம எனக்கு ஒன் அளவுக்கு அதுல இன்ட்ரெஸ்டும் இல்ல.. நீ பொறுமையா  இரேன் படிப்பு முடிய... ஒன்னா ஒரு வீடு பாத்து செட்டில் ஆயிருவம்.."

"சரி டி இந்த கதய விடு என்ன மன்னிச்சிக்க"

சுந்தரின்  மனம் வேதனை தாங்கி வீங்கிப் போனது.. அவனது அடித்தொண்டையில் அவ்வளவு  அழுத்தம்.. எனது மனைவி எனக்கு மட்டுமே சொந்தமான என் மனைவி.... எனது ஆசையை  தீர்க்காமல் எங்கோ யதார்த்தமே இல்லாத விடயத்தில் முழு ஆசை வைப்பது என்ன  தர்மம்? .. அவள் மனம் நோகும் படி எப்போதேனும்  நான் நடந்ததுண்டா? அவளின்  விருப்பத்திற்கு மாற்றமாய் நான் மறுதலித்ததுண்டா? அவளின் விருப்பத்தை  மாத்திரமே முதன்மையாய் வைத்து என் விருப்பத்தையெல்லாம் ஒதுக்கும் என்னை ஏன்  இப்படி வதைக்கிறாள்? .. ஒரு சராசரியான ஆணாக நான் இருந்தும் மனதளவில் கூட  மாசு படாமல் நான் இருந்ததெல்லாம் என்னை இவள் இப்படி ஒதுக்கி விடத்தானா?...  அன்று  எவ்வளவு ஆசையுடனும் காதலுடனும் அவளை கட்டியணைத்தேன்.. ஏதோ மூன்றாம்  நபர் செய்ததைப் போல் என்னை தள்ளி விட்டு என்னை அவமானப்படுத்தியதெல்லாம் என் மனதில் எரிந்து கொண்டிருப்பதை அவள்  அறிவாளா??...இதனால் தான்.. நான் அப்படி ஒரு அசிங்கமான காரியத்தை செய்பவனாக மாறி விட்டேன்..

***
ஸ்மிதாவும் சுந்தரும்..

ஸ்மிதா..  உண்மையிலேயே அவள் ஒரு மூன்றாம் பிறை ஸ்மிதா தான்... சுந்தரின் அழகையும்  அவனது உடற்கட்டையும் அதிகம் ரசித்து ஒர் இச்சையுற்றவள்.. இவள் இப்படிப்பட்டவள் என்று தெரிந்த சுந்தர் அவளை  கண்டு விலகிச் செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்... ஸ்மிதாவும் அழகில் ஒரு  குறையும் இல்லாதவள். அவள் தான் ஆபீஸ் குயின்.. அவளுடன் டீ மற்றும்  டிபனுக்காய் செல்ல எத்தனையோ ஆண்கள் தவமிருப்பார்கள்.. ஆனால் அவளோ தனக்கு  பிடித்தமான ஆண்களை மட்டுமே தெரிந்து அவர்களை அடைவதில் குறிக்கோளாய்  இருப்பாள். அப்படி அவளது நீண்ட நாள் குறிக்கோளில் ஒன்றுதான் சுந்தர்...  சுந்தரை பார்த்துச் சிரிப்பது அவன் பக்கத்தில் போய் உரசுவது, வாட்சப்பில்  வீடியோ கால் பண்ணுவது, அரை நிர்வாண புகைப்படங்களை ஸ்டேடஸ்ஸில் பதிவிடுவது  என்று பல வேலைகளை பார்த்து சுந்தரை அவளது வலையில் வீழ்த்த பார்த்தாள்...  ஒரு முறை ஸ்மிதா கொஞ்சம் எல்லை மீறி நடந்ததால் ஆபீஸ் என்றும் பாராமல்  சுந்தர் கத்திவிட்டான்.. அன்றிலிருந்து ஸ்மிதா அவனை நெருங்குவதில்லை..  சுந்தர் அஞ்சலியை அன்று ஆசையுடன் கட்டியணைத்ததை அஞ்சலி அவமானப்  படுத்தியதால்.. உணர்ச்சி வெடிப்பில் உருகிப் போன சுந்தர் கவலையில்  ஆழ்ந்திரிக்க.. அந்த நேரம் பார்த்து ஸ்மிதாவும் வாட்சப்பில் மெசேஜ்  அனுப்ப... சுந்தர் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.. அவன் மனத்தாங்கலுக்கு  ஸ்மிதா சொல்லும் வார்த்தைகள் ஆறுதலளித்தன..

சுந்தரும் அவள் மூன்றாம் நபர்  என்றும் பாராமல் நடந்த அத்தனையையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி அவளிடம்  கொட்டித் தீர்த்து விட்டான்.. இப்படி இரண்டு மூன்று நாட்கள் என்று அவர்களின்  பழக்கம் அதிகரித்தது... இதை சந்தர்ப்பமாய் பயன்படுத்தி ஸ்மிதாவும் வலை வீசினாள்.. அவனும் விழுந்தான்...

***

"எம் மேல கோபப்படாத டா.. நான் என்ன பன்றது.. ஒன்னு தெரியுமா லாஸ்ட் செமெஸ்டர்ல நான் தான் பெஸ்ட் டா"

"உண்மையாவா பேபி.. வெல் டன் டி" அவன் மனதிற்குள்.. எத்தனை நாளைக்கு நான் இப்படிப் போலியாய் இருப்பது என்று சலித்துச் சிரித்தான்..இப்படி இருக்க வாட்சாப் மெசேஜ் ஒன்று வந்தது.. எடுத்துப் பார்த்தான், ஸ்மிதாவிடமிருந்து வந்தது
" டினர்க்கு நீ ப்ரீயா?? நைட் ஒன் ரூம்ல தங்கிக்கிறன்" அதை பார்த்து போனை வைத்து விட்டு அஞ்சலியிடம்

"பேபி வாயென் டினர்க்கு போவம்.. இன்னைக்கு எங்கூட தங்கிக்கயன்"

"அய்யா சாமி ஆள விடு.. நான் போறேன்... டைம் ஆச்சு" என்று அவள் பதிலளிக்க..

அழுத்தம் மிகுந்த மனதுடன், " சரி டி அப்ப நானும் வாரேன்" என்று கூறி விட்டு போனை எடுத்து ஸ்மிதாவிற்கு ரிப்ளை பன்னினான். "I'm coming to pick up you be ready"

வதாவதன்

 

Comments