ASA-uPVC ரூபிங் சீட்களின் முதலாவது தொகுதியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள எஸ்-லோன் | தினகரன் வாரமஞ்சரி

ASA-uPVC ரூபிங் சீட்களின் முதலாவது தொகுதியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள எஸ்-லோன்

கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் உபநிறுவனமான எஸ்-லோன் லங்கா (பிரைவட்) லிமிடட் நிறுவனம் உள்ளூர் சந்தையைத் தாண்டி அண்டையான நாடான இந்தியாவுக்கு ரூபிங் சீட்களை ஏற்றுமதி செய்து புதிய வரலாற்றை படைத்துள்ளது.  

எஸ்-லோன் ரூபிங் சீட்களை சந்தையில் சிறந்ததாக்குவதற்கு பல்வேறு காரணிகள் பங்களித்துள்ளன. அவை நிறமாற்றம், புூஞ்சை என்பவற்றுக்கு எதிர்வினையாற்றுவதுடன், சுத்தப்படுத்தவேண்டிய தேவை அற்றதாகவும், அழகானதாகவும், நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளன. இந்த சீட்கள் 70% வெப்பத்தை உறிஞ்சி வீடுகள் மற்றும் வெப்பமண்டல ஸ்தானங்களுக்கு குளிர்மையை அளிக்கின்றன. இந்த விசேட அம்சமே கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக கணிசமான வெப்ப அதிகரிப்பைக் கொண்ட இந்தியாவின் சந்தையை ஈர்க்கவைத்துள்ளது. மாற்று கூரை உற்பத்திகளுடன் ஒப்பிடும்போது இதன் எடை கணிசமானளவு குறைவாக இருப்பதால் இலகுவில் இதனைப் பொருத்த முடியும். 

இந்தப் புதிய ஏற்றுமதி முயற்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கெப்பிடல் மஹாராஜா குழுவின் குழும பணிப்பாளர் எஸ்.சீ.வீரசேகர குறிப்பிடுகையில், “எமது அன்புக்குரியவர்களுக்கு தரம் குறைந்த மற்றும் பாதுகாப்பற்ற எதனையும் எஸ்-லோனில் நாம் தயாரிப்பதில்லை. இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பனவே எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த எம்மைத் தூண்டும் அளவு கோலாகக் காணப்படுகிறது. நாம் சான்றிதழ்களுக்குப் பின்னால் துரத்துவதில்லை, செய்யும்போது அதனைத் திறமையாகச் செய்வோம். நாம் உரிய தரத்தைப் பூர்த்தி செய்வதாலும், அதனைச் சிறந்ததாகச் செல்வதாலும் எமக்கு சான்றிதழ்கள் தானாகக் கிடைக்கின்றன” என்றார். 

கீழிருந்து மேலான (bottom to top) அணுகுமுறையில் எஸ்-லோன் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இதன் அர்த்தம் என்னவெனில், உயர் முகாமைத்துவத்தினால் வழங்கப்படுகின்ற பணிப்புரைகளுக்கு அமைய மாத்திரம் செயற்படாமல் அடிமட்டத்திலிருந்தான நிலைப்பாடுகள் விமர்சன ரீதியில் மதிப்பிடப்படுவதாகும் என்றார்.  

Comments