நம்பிக்கை | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கை

பரிதியின் பிரவேசம்
பாரை மகிமைப்படுத்த
உரிமையாய் பணிக்கென
புகுவதற்காய் துயில் நீங்கி எழும்
துடிப்பான இதயங்களில்
துளிர்த்து நிற்கும் எல்லையற்ற
கனாக்கள்! அவை
நனவாகி நன்மைதரும்
நாளொன்று வருமென
உணவை சிக்கமாக்கி
உடையை மலிவாக்கி
பெற்றெடுத்த செல்வங்களின்
தேவைகளை நிறைவேற்ற
அரும்பாடு பட்டு
நாளைய விடிவுக்காய்
வாழ்வுப் பாதையை
நம்பிக்கையோடு
கடக்கின்றனர்!

பசறையூர்
மல்லிகா பத்மநாதன் 

Comments