அசெட்லைன் லீசிங் தற்பொழுது அம்பலாங்கொடையில் | தினகரன் வாரமஞ்சரி

அசெட்லைன் லீசிங் தற்பொழுது அம்பலாங்கொடையில்

அசெட்லைன் லீசிங் தற்பொழுது அம்பலாங்கொடையில்-Assetline Leasing-Ambalangoda

- அசெட்லைன் நாடு முழுவதிலும் 53 கிளைகளையும்,தென் மாகாணத்தில் மாத்திரம் 7 கிளைகளையும் கொண்டுள்ளது. 
- முக்கியமானஅமைவிடங்கள், இலகுவான அணுகல், சிறந்த சூழல், வசதி மற்றும் கிளைகளுக்கு இடையிலான வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம்


இலங்கையின் முன்னணி லீசிங் கம்பனிகளில் ஒன்றான அசெட்லைன் லீசிங் 2021 மே 06ஆம் திகதி அம்பலாங்கொடைவில் புதிய கிளையைத் திறந்துவைத்து தனது பிராந்திய விநியோகத்தை விஸ்தரித்தது. இலக்கம் 24, காலி வீதி, உராவத்த, அம்பலாக்கொட எனும் முகவரியில் அமைந்துள்ள இப்புதிய கிளை நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட்ட அதன் கிளை வலையமைப்பின் 53வதாகும்.

வாகனங்களுக்கான லீசிங், வாகன கடன் மற்றும் வர்த்தகக் கடன் உள்ளிட்ட அனைத்து நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடி வகையிலான அனைத்து லீசிங் தேவைப்பாடுகளையும். அம்பலாங்கொடை கிளை நிறைவேற்றும். வாடிக்கையாளர்களின் சௌகரியத்துக்காக 23ஃ7 சேவையை வழங்குவதற்கு இங்கு Easy Pay இயந்திர வசதியும் உள்ளது.

அசெட்லைன் லீசிங் தற்பொழுது அம்பலாங்கொடையில்-Assetline Leasing-Ambalangodaஇந்தக் கிளை திறப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அசெட்லைன் லீசிங் கம்பனி லிமிடெட்டின் தலைவர் ரோஹண திஸாநாயக குறிப்பிடுகையில், “உள்ளூர் சமூகத்தின் வசதிகளை அதிகரிக்கும் அதேநேரம் தனியாட்களின் தேவைகளுக்கு ஏற்ப, வினைத்திறனான முறையில் நிதித் தீர்வுகளை வழங்குவதில் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை அம்பலாங்கொடை கிளை மீண்டும் வலியுறுத்துகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாம் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகிறோம். நிதிச் சேவைகளுக்கான அணுகல் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களே எமது பிரதான குறிக்கோளாகும். வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மாத்திர எமது குறிக்கோள் அல்ல, நாட்டைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்வதற்கு குறிப்பாக கிராமியத் துறையில் பங்களிப்புச் செலுத்துகின்றோம்” என்றார்.

அசெட்லைன் லீசிங் கம்பனி லிமிடட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான திரு.அஷான் நிசங்க கருத்துத் தெரிவிக்கையில், “பல்வேறு சவால்கள் இருந்தாலும், வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதில் நாம் உறுதியாக இருப்பதுடன், அப்பாதையில் அம்பலாங்கொடை கிளை மற்றமொரு படிக்கல்லாகும். எமது அனுபவம், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம் மிக்க அணி எண்பன எமது வெற்றிக்கதையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவதுடன், தேவைகளை நிறைவேற்ற கம்பனியை எப்பொழுதும் தயாராக வைத்துள்ளன” என்றார்.

அசெட்லைன் லீசிங் தற்பொழுது அம்பலாங்கொடையில்-Assetline Leasing-Ambalangoda

இலங்கையின் லீசிங்க சந்தையில் அசெட்லைன் லீசிங் தனக்கென தனியானதொரு இடத்தை வகுத்துள்ளது. கம்பனி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வகையான புத்தாக்க உற்பத்திகளை வழங்கி வருகிறது. நெகிழ்வுப்போக்குக் கொண்ட, வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறை மற்றும் லீசிங்கின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் என்பனவே அவர்களின் வணிக சூத்திரத்தின் முக்கிய கூறுகளாகும்.

குழுமத்தின் ஏனைய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளையும் இந்தக் கிளையின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கொள்வனவு, விற்பனை மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாற்றுவது போன்றவற்றை ரியசக்வல ஊடாகவும், பஜாஜ் அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள், MRF டயர் மற்றும் பஜாஜ் ஒயில் போன்றவற்றை DPMC அசல் உதிரிப்பாக காட்சியறைகளிலும், காப்புறுதித் தீர்வுகளை அசெட்லைன் இன்ஷ_ரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடட் நிறுவனத்திலும், இயற்கையான விவசாய உற்பத்திகளை DP குளோபல் வெஞ்சர்ஸ் ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம். 

Comments