CAMON 17 சீரிஸை அறிமுகப்படுத்திய Tecno Mobile | தினகரன் வாரமஞ்சரி

CAMON 17 சீரிஸை அறிமுகப்படுத்திய Tecno Mobile

வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான TECNO அதன் சமீபத்திய மாதிரியான CAMON 17 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. அன்ட்ரொய்ட் சார்ந்த ஸ்மார்ட்போனான இது, அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்தொலைபேசியில் அதனை ஈர்க்கக்கூடிய MediaTek Helio G85 (12 nm) chipset, Octa-core (2x2.0 GHZ Cortex-A75 & 6/18 GHz Cortex-a55) processor ஆகியவற்றைக் கொண்டுள்ளதோடு Android11, HIOS 7.6 OS மூலம் இயக்கப்படுகிறது. CAMON 17 இன் பிரதான கெமரா 48MP மற்றும் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற 16MP கொண்ட முன் கெமராவினையும் கொண்டுள்ளது. 9mm தடிப்பம் கொண்ட இது உள்ளங்கையில் வைத்திருக்க வசதியாக பொருந்துகிறது. நேர்த்தியான வடிவமைப்புடன் வெள்ளி நிறத்தில் (Frost Silver) கிடைக்கிறது.

அவர்களது உலகமயமாக்கல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, TECNO தரக்குறியீடு அண்மையில் ஹெலிவூட் பிரபலமான Chris Evans இனை அதன் தூதராக நியமித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடு உடனான தனது இணைவு குறித்து ஹொலிவூட்டின் உச்சத்திலுள்ள எவன்ஸ் தெரிவிக்கையில் “டெக்னோவுடன் கூட்டு சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு புதுமையான தரக்குறியீடாகும். அந்த வகையில் அதன் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதன் தத்துவமான 'Stop at Nothing' என்பதற்கு அமைவானதாகும்.”

CAMON 17/17 Pro கெமராக்களின் எல்லையற்ற திறன்களை நிரூபிக்கும் ஒரு ' Rise of the Selfie' எனும் கிறிஸ் எவன்ஸ் நடித்த ஆவணப்படமும் இவ்வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும். CAMON 17 என்பது ஒரு இலட்சிய வடிவமைப்பாகும், இது இன்றைய சந்தையில் ‘தெளிவான செல்பி கெமரா’ என்று பெருமையை கொண்டுள்ளது.

நடிகை மற்றும் மாடல் ரோஷல் ரோஜர்ஸ், சினிமா கதை ஆசிரியர் Cjay மற்றும் பயண வீடியோ பதிவாளர், greenfolk_girl என அழைக்கப்படும் மாஷி மற்றும் சஹன் பெரேரா உள்ளிட்ட உள்ளூர் பிரபலங்களால் இதன் உள்ளூர் வெளியீட்டு நிகழ்வு அலங்கரிக்கப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் உத்தியோகபூர்வ டெப்லெட் மற்றும் கையடக்கத் தொலைபேசி பங்காளரான TECNO, உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரபலங்களுடனான தொடர்புகளை பேணி வருகின்றது.
 

Comments