அன்பை நெசவு செய்வோம்!! | தினகரன் வாரமஞ்சரி

அன்பை நெசவு செய்வோம்!!

அன்பு ஒரு மலர்
அது நறுமணம் தர
இதயத்தைத் தொட
இதமாக இருக்கும்!
அன்பு ஒரு கேடயம்!
வம்பைக் குறைத்திடும்
ஆபத்தைக் காத்திடும்!
ஆயுளைக் கூட்டியும்!
அன்பு ஒரு சுகமான சுமை
அது ஒரு அழகிய விஷப்பரீட்சை
ஜாதி மத நிற பேதம் தாண்டி
ஊற்றெடுக்கும் ஓர் அருளூற்று!
அன்பு வார்த்தையில்லாப் பாடல்
அது உடலே யில்லா ஊடல்!
என்றும் நிறைந்திருக்கும் தேடல்
அன்பில்லா பயிருக்கும் பரிசு வாடல்!
அன்பு உடல் பொருள் ஆவி
அனைத்தையும் இழந்தேனும்
தியாகம் செய்து பெறத்துடிக்கும்
உயிருள்ள ஜீவ நாடி!!
உண்மையான அன்பை
அள்ளிக் கொடுக்க
அன்பும் ஆரோக்கியமும்
அணுவளவும் குன்றுவதில்லை!
அன்பைத் தவறாமல் கொடுக்க
சந்தோஷ சாம்ராஜ்யம்
மண்ணில் இருந்து
விண்ணைத் தொடும்!
உறவுகளைச் சொந்தங்களை
உண்மையான பந்தங்களை
உள்ளத்தைத் தொட்டுத்தாலாட்ட
உறவுகளை அன்பில் நீராட்டி
உயிரைப் புதுப்பிக்க
உயிருள்ளவரை உண்மையாய்
உரிமை கொண்டாடி
ஆனந்த வெள்ளத்தில்
இணைபிரியாமல் ஒன்றித்திட
உயிரையும் கொடுக்கத் தூண்டும்
உண்மையான அன்பின் பிணைப்பு!
அன்பைத் தூவி
அறுவடை செய்வது
ஆளுக்காள் வேறுபட
அன்பைச் சிந்தி
புன்னகை செய்வோரை
அசட்டை செய்யாதீர்!
அனைத்து வேதமும்
ஓதும் ஒரே தாரக மந்திரம்
"அன்பு ஒன்றே ஜீவ நாடி"!
அன்பால் உலகை ஆள்வது
ஆயுதத்தால் ஆள்வதிலும் இலகு!!
அன்பை நெசவு செய்வோம்!!
அதன் ஆடையை அனைவருக்கும்
அழகாய் அணிவித்து  மகிழ்வோம்!

கவியரசி
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா,
பஸ்யால

Comments