புது விடியல் | தினகரன் வாரமஞ்சரி

புது விடியல்

உன்னுடைய தரிசனந்தான்
என்னை உயிர்ப்பிக்கும்
உண்மை இதைச் சொல்ல எனக்
கில்லையடி வெட்கம்!

விரித்து வைத்த பூக்களைப்போல
சிரித்த உன்றன் முகமும்
விழி முழுக்கக் கொதுப்பியுள்ள
உனது எதிர் பார்ப்பும்...

உண்மையிலே புதுவிடியல்
பிறக்கும் எந்த நாளும்
உன்முகத்தைப் பார்த்துப் பார்த்து
என்னைச் செதுக் கிடுவேன்!

எப்பொழுதும் எவரையுமே
செதுக்கும் அன்பு ஒன்றே!
எதிர் எதுதான் வந்தாலும்
முகம் கொடுத்து வெல்வோம்!

உன்னுடைய உறவு என்னைச்
செதுக்கியாச்சு என்றோ...
என்னைவந்தும் எனைச்சரிக்க
முடியாது இதே உண்மை!

போகுமிட மெல்லாமே
வெற்றி வர வேற்கும்
பொய்யில்லாத அன்பிருந்தால்....
என்றும் தோல்வி இல்லை!

வீட்டில் அன்பே கொழித்திருந்தால்...
வீழ்ச்சியில்லை வாழ்வில்!
ஊக்கம், உயர்ச்சி அனைத்தும் வந்து
உயர்த்தும் வாழ்ந்து பாரு!

தேடி உன்னைக் கண்டெடுத்தேன்
நிதமுமே சந்தோசம்
சிரமமின்றிப் போகுதென்றன்
வாழ்க்கை வண்டி என்றும்

உன்னுடைய தரிசனத்தால்...
என்றும் மகிழ்ச்சி எனக்கு
உண்மை இதைச் சொல்லச்சொல்ல
இனிக்குதல்லோ வாழ்க்கை!

கவிமணி நீலாபாலன்

Comments