ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் ரிஷாத்தா? | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் ரிஷாத்தா?

ரிஷாத் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரல்ல என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராவார். தேர்தலின்போது அவருடைய கட்சி எமது கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்டது.

எனினும் தற்போதைய சமகால அரசியல் நிலைவரங்களுக்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படும் கூட்டணியில் ரிஷாத் பதியுதீனின் கட்சி இணைத்துக் கொள்ளப்படவில்லை.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

Comments