தகவல்களை சரியான முறையில் வழங்க ஜனாதிபதி ஊடக மையம் கொழும்பில் திறந்து வைப்பு | தினகரன் வாரமஞ்சரி

தகவல்களை சரியான முறையில் வழங்க ஜனாதிபதி ஊடக மையம் கொழும்பில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக மையம் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் கடந்த (29) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாலமைந்துள்ள பழைய சார்டட் வங்கிக் கட்டடத்தின் கீழ் மாடியில், இந்த ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தினூடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நனவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி அலுவலகத்தினதும் தகவல்களை, சரியாகவும் வினைத்திறனாகவும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குவதே, இந்த ஜனாதிபதி ஊடக மையத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

வாராந்தம் நடத்தப்படும் ஊடகச் சந்திப்புகளின்போது, தெரிவு செய்யப்பட்ட தலைப்பின் கீழ், ஜனாதிபதியிடமோ அல்லது ஜனாதிபதியின் பேச்சாளரிடமோ, நேரடியாகவோ அல்லது இணைய வழி ஊடாகவோ கேள்விகளை கேட்பதற்கு, ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.

40 ஊடகவியலாளர்கள் ஒரே தடவையில் அமரும் வகையிலும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து அம்சங்களுடனும், இந்த ஊடக மையம் அமைந்துள்ளது.

Comments