பிரபல சிங்கள நடிகை ஹயசிந்த் விபத்தில் மரணம் | தினகரன் வாரமஞ்சரி

பிரபல சிங்கள நடிகை ஹயசிந்த் விபத்தில் மரணம்

நுவரெலியா − தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கு அண்மையில் நேற்று  அதிகாலை 1 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் பிரபல சிங்கள நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த் விஜயரத்ன வயது (75) என்ற நடிகையே உயிரிழந்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்பு நோக்கி வருகையில் நேற்று அதிகாலை நுவரெலியா ஹற்றன் பிரதான வீதி வழியாக பயணித்த டொல்பின் வேன் லிந்துலை நகரத்திற்கு அண்மையில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாரதியின் தூக்க கலக்கத்தாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேன் சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.வேனில் சாரதியும் நடிகையுமே பயணித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

 

Comments