2021இன் முதல் அரையாண்டில் SLT குழுமம் நேர்த்தியான நிதிப் பெறுபேறுகள் பதிவு | தினகரன் வாரமஞ்சரி

2021இன் முதல் அரையாண்டில் SLT குழுமம் நேர்த்தியான நிதிப் பெறுபேறுகள் பதிவு

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, தொலைத் தொடர்பாடல்கள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL 2021 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபமாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 29.9மூ வளர்ச்சியைப் பதிவுசெய்து, 6.0 பில்லியன்ரூபாயை பதிவு செய்துள்ளது. பரந்தளவில் செலவுக் கட்டுப்பாடுகள், குழுமத்தில் விரயங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கழிவுகளை பணமாக மாற்றியமை, OPEX செலவுகளை நிர்வகித்திருந்தமை போன்றவற்றினுௗடாக ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்தது.

தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் அதன் வாடிக்கையாளர்கள் அனுகூலம் பெறுவதை SLT-MOBITEL உறுதி செய்திருந்ததுடன், அதற்காக சேவைகளை மேம்படுத்தியிருந்ததுடன், உட்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கமான தயாரிப்பு வழங்கல்கள் போன்றவற்றையும் மேற்கொண்டிருந்ததாக குழுமம் அறிவித்துள்ளது.

ளுடுவு குழுமத்தின் வருமானம் ரூ. 49.9 பில்லியனாக அதிகரித்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 13.3% அதிகரிப்பை வருமானம் பதிவு செய்திருந்தது.

தொற்றுப்பரவலுடனான சூழலிலும் வியாபாரத் தொடர்ச்சியில் கவனம் செலுத்தியிருந்தமை இதில் முக்கிய பங்காற்றியிருந்தது. குழுமத்தின் EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) என்பது ரூ. 19.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10.0மூ வளர்ச்சியாகும். குழுமத்தின் தொழிற்படு இலாபம் என்பது ரூ. 7.2 பில்லியனாகும். 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 4.2% வளர்ச்சியை பிரதிபலித்திருந்தது.

Comments