அசெட்லைனிடமிருந்து ‘லீசிங் மற்றும் கடன்’ | தினகரன் வாரமஞ்சரி

அசெட்லைனிடமிருந்து ‘லீசிங் மற்றும் கடன்’

நாட்டின் அனைத்து மூலைகளிலும், அனைத்துத் தரப்பினருக்கும் புத்தாக்கமான, தொந்தரவு அற்ற மற்றும் அணுகக்கூடிய லீசிங் தீர்வுகளை வழங்குவதில் நன்மதிப்பைப் பெற்றுள்ள அசெட்லைன் லீசிங், பதிவு செய்யப்பட்ட வாகனங்களைப் பெறுவதற்கு மற்றுமொரு முயற்சியாக ‘லீசிங் மற்றும் கடன்’ தீர்வை வழங்க முன்வந்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள வரையறைகளால் புத்தம் புதிய வாகனங்களுக்குத் தட்டுப்பாடு காணப்படும் பின்புலத்தில், பதிவு செய்யப்பட்ட உயர்ந்த தரத்தைக் கொண்ட வாகனமொன்றுக்கு உரிமையாளராக வேண்டும் என எண்ணத்தைக் கொண்டவர்களின் கனவை இது நனவாக்குகிறது.

அசெட்லைனின் இந்த ‘லீசிங் மற்றும் கடன்’ தீர்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வர்த்தக லீசிங்கின் தலைவர் ஹிரந்த ஜயசிங்ஹ குறிப்பிடுகையில், “இந்த வசதியின் ஊடாக பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட பாவனைக்கான வாகனம் அல்லது அவர்களின் வணிகத்துக்கான சிறிய டிரக் ஒன்றை சிறந்த தரத்துடன் நிதி வசதியின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு இரட்டிப்பு தெரிவை நாம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்” என்றார்.

எந்த வகையான வாகனத்தையும் குறைந்த ஆவணப்படுத்தல், துரித மற்றும் தொந்தரவற்ற சேவையின் மூலம் லீசிங் வசதியில் கைமாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

“எந்த வகையான வாகனமாக இருந்தாலும் எமது தனித்துவமான வாடிக்கையாளர் சலுகைகளால் அசெட்லைனுடன் வாடிக்கையாளர்கள் கைகோர்ப்பது அதிகரித்துள்ளது. உண்மையில்,  கொடுக்கல் வாங்கலின் தன்மை மற்றும் அளவு என்பவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் நிதி ஆலோசகர்களாகப் பணியாற்றுவதை நாம் அதிஷ்டமாகக் கருதுகின்றோம். அசெட்லைனின் லீசிங் மற்றும் கடன் தீர்வானது தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமன்றி நிதி உதவிகளைத் தேடும் தொழில்முனைவோர் மற்றும் அல்லது பெருநிறுவனங்களுக்கும் ஏற்புடையதாகும்” என ஜயசிங்ஹ குறிப்பிட்டார்.

எப்பொழுதும் போல மேலதிக நன்மைகளை வழங்குவது, இந்தத் தீர்வை தவிர்க்க முடியாததாக்குகிறது. எந்தவொரு நான்கு சக்கர பயணிகள் வாகனம் மற்றும் மினி டிரக்கிற்கு வாகனப் பதிவுக் கட்டணம் அல்லது முதல் வருடத்துக்கான காப்புறுதித் தவணக் கட்டணம் என்பன இலவசமாக வழங்கப்படும்.

அசெட்லைன் லீசிங் ஆனது அனைத்து இலங்கையர்களுக்கும் 2003ஆம் ஆண்டு முதல் லீசிங் பங்காளராக விளங்குவதுடன், இது தற்பொழுது நாடு முழுவதிலும் 53 கிளைகளில் இயங்கி வருகிறது. இது நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்தியிருப்பதுடன், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அர்ப்பணிப்பான துறைசார் குழு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும்.

எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்குமான லீசிங்ஃகடன் பொதிகள் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள அசெட்லைன் லீசிங்கின் 0114700100 என்ற நேரடித் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.

Comments