ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது 2020/21; வெற்றியாளர்களை அறிவித்த நிப்போன் பெயின்ட் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது 2020/21; வெற்றியாளர்களை அறிவித்த நிப்போன் பெயின்ட்

ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது 2020/21; வெற்றியாளர்களை அறிவித்த நிப்போன் பெயின்ட்-Two Sri Lankan Students Emerge as Winners of AYDA Nippon Paint Colour Award

2020/21 வருடத்துக்கான ஆசிய இளம் வடிவமைப்பாளர்களாக மலேசியாவைச் சேர்ந்த தயான் அரிபின் மற்றும் இவா லிம் ஃபீ யா ஆகியோர் வெற்றி பெற்றனர் என்ற அறிவிப்புடன் நிப்போன் பெயின்ட் ஏற்பாடு செய்திருந்த ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது சர்வதேச இறுதிப்போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த இரேனி பத்மபெரும மற்றும் டிலிக் அபேகோன் ஆகியோர் உள்ளடங்கலாக 13 இடங்களிலிருந்து 23 பேர் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். புத்தாக்கம் மற்றும் நிலைபேறு தன்மையை தமது கற்பனையில் கொண்டுள்ள வளர்ந்துவரும் வடிமைப்பாளர்களின் சுறுசுறுப்பான உள்ளுணர்வு இந்த வருட சர்வதேச போட்டியில் நடுவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

“ஆசிய இளம் வடிவமைப்பாளர்கள் 2021 இன் உள்ளூர் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் அபூர்வமான திறனைக் கொண்டுள்ளவர்களை அடையாளம் காணவும், அவர்களுக்குத் தளமாகச் செயற்படுவதற்கும் இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக இருந்தமையை நிப்போன் பெயின்ட் தாழ்மையாகக் கருதுகிறது. தற்பொழுது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த வருட நிகழ்வு முற்று முழுதாக மெய்நிகர் முறையில் (virtually) இடம்பெற்றது. உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புத் துறையில் திறமையைக் கொண்டுள்ள வளர்ந்துவரும் திறமைசாலிகளை மேலும் வலுப்படுத்தும் வர்த்தக நாமமாக நிப்போன் பெயின்ட் தொடர்ந்தும் காணப்படும்” என நிப்போன் பெயின்ட் ஸ்ரீலங்காவின் பொது முகாமையாளர் நிமந்த அபேசிங்ஹ தெரிவித்தார்.

புத்தாக்கமான மற்றும் நிலைபேறானதாக இருக்கும் அதேநேரம் சமூக உணர்வுள்ள இடங்களை உருவாக்க ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்களுக்கு களத்தை வழங்கும் வகையில் முன்னோக்கி : மனிதனை மையாகக் கொண்ட வடிவமைப்பு என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்துக்கான சர்வதேச வடிவமைப்புப் போட்டி மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது. நிலையான சனத்தொகை வளர்ச்சியைக் கொண்டுள்ள ஆசியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு இந்தத் தொடர் எண்ணத்திலான வடிவமைப்பு மிகவும் அவசியமானதாகும். இருந்தபோதும், இந்த வளர்ச்சியானது துரிதமான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் மற்றும் ஸ்மார்ட், நிலைபேறான உட்கட்டமைப்பு வசதிகளை நோக்கி நகரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தொலைநோக்கு நகரங்களை வடிவமைப்பதற்கு இது இடமளிப்பதாகவும் அமைகிறது. சர்வதேச வடிவமைப்புத் தளத்தில் தமது நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்த வடிவமைப்பாளர்களின் பணிகளில் மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பு என்ற தொனிப்பொருள் பிரதிபலித்தது.

நிபோன் பெயிட் கலர் விருதை வெற்றிபெற்ற இரோனி பத்மபெரும கட்டடக்கலை பிரிவில் நிலையான இணை வாழ்க்கை சமூக மையம் என்பதை வழங்கியிருந்தார். சிட்டி ஸ்கூல் ஒப் ஆர்கிடெக்ஷரின் மாணவரான பத்மபெரும, வருமான பல்வகைமை மற்றும் உள்ளூர் வாசிகளை பலப்படுத்த கலப்பு வருமான சமூகத்தை உருவாக்க இரண்டாம் நிலை தொழில்துறையை –சுற்றுலா- அறிமுகப்படுத்தி அதன் ஊடாக இலங்கையின் தேயிலைத் துறையை வலுப்படுத்துவதற்கான வடிவமைப்பை முன்மொழிந்திருந்தார்.

அதேநேரம், சிட்டி ஸ்கூல் ஒப் ஆர்கிடெக்ஷரின் மாணவரான டிலிக் அபேகோன் கழிவுகள் அற்ற எரிசக்தி ஆலையை நோக்கிய பயணம் என்ற திட்டத்தின் ஊடாக உள்ளக வடிவமைப்புப் பிரிவில் நிப்போன் பெயின்ட் கலர் விருதை வென்றிருந்தார். எரிசக்தி ஆலைகளுக்கான கழிவுகள் கொழும்பு மாநகரசபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ முறைக்கு நிலையான தீர்வாக அமைகிறது. இது மீள்சுழற்சி செய்வதற்கு முன்னர் கழிவுகளை மின்சாரம் ஆக்குவதற்கான புதுப்பிக்கத்தக்க சக்தி முறையாகும்.

இந்த வெற்றி தொடர்பில் அபேகோன் கருத்துத் தெரிவிக்கையில் : “உள்ளூரில் உள்ள திறமைசாலிகளுக்கு சர்வதேச தளத்தை வழங்கியமைக்காக ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது மற்றும் நிப்போன் பெயின்ட் ஆகியவற்றுக்கு நன்றி கூறுகின்றோம். எமது தரத்தை சீர்செய்யவும், சர்வதேச சகபாடிகளுடன் சிந்திப்பதற்கும் ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்தது. கடந்த வருடங்களில் இலங்கையர்கள் விதிவிலக்கான முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இம்முறை தொற்றுநோய் சூழல் காணப்பட்டாலும் எமது இந்த வெற்றி வரிசையைத் தொடர முடிந்தமை உண்மையில் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுப் பயணத்தில் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் நிப்போன் பெயின்ட் ஏற்பாடு செய்த இந்த வருடத்துக்கான சர்வதேச வடிவமைப்புப் போட்டியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு ஊடாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அனைத்துப் பங்குபெற்றுனர்களும் ஊடாட்டங்களை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை வழிகாட்டிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களால் மெய்நிகர் முறையில் பயற்சிகள் வழங்கப்பட்டன. மெய்நிகர் விருது வழங்கும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதுடன், 700ற்கும் அதிகமானவர்கள் நிகழ்வின்போது பார்வையிட்டதுடன், விருது வழங்க முன்னர், பங்குபற்றுனர்களின் கதை சொல்லும் திறனை மேம்படுத்த ஒன்லைன் செயலமர்வும் முன்னெடுக்கப்பட்டது. முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வை ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதின் யூடியூப் சனலின் youtu.be/uyVuF6Q0Eng என்ற இணைப்பில் பார்வையிட முடியும்.

“உலகத் தொற்றுக்கு நாம் தொடர்ந்தும் தைரியமாக முகங்கொடுப்பதால் புத்தாக்கம், நிலைபேறு தன்மை மற்றும் பட்சாதாபம் என்பவற்றின் முக்கியத்துவத்தை கடந்த வருடம் எமக்குக் காண்பித்துள்ளது. ஆகவே ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதின் இந்த பதிப்பு எங்கள் முன்னோக்கிய பயணத்தில் ஒரு பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது, மேலும் பிரமிக்க வைக்கும் மற்றும் மனித தொடுதலுடன் புதுமையான இடம் மற்றும் வடிவமைப்பு தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திய சிறந்த உள்ளீடுகளைக் கண்டதையிட்டு பெருமிதம் அடைகிறேன்” என NIPSEA குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி வீ சீயூ கிம் தெரிவித்தார்.

படைப்பாற்றல் சுடரைத் தொடர்ந்தும் பேணுவதற்கு, இளம் வடிவமைப்பாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழில்துறையின் நிபுணர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதற்கு நிப்போன் பெயின்டின் ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதின் 14வது பதிப்பை நோக்கிய பயணம் ஆரம்பமாகியுள்ளது. வடிவமைப்பின் மூலம் பரிவைப் பெருக்குதல் என்ற தொனிப்பொருளிலான 2021/21 ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதுடன், புத்திக் கூர்மைக்கான எல்லைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது 2020/21 பதிப்பு தொடர்பான மேலதிக தகவல்களை asiayoungdesignerawards.com என்ற இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Comments