நடிகைக்கு முத்தம் கொடுக்க மறுத்த அரவிந்த்சாமி.. | தினகரன் வாரமஞ்சரி

நடிகைக்கு முத்தம் கொடுக்க மறுத்த அரவிந்த்சாமி..

சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. பெரிய அளவு ஹீரோவாக சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போய் பிசினஸ் என செட்டிலானார்.

அதற்கு அவரது படங்கள் சரியாக ஓடாததும் ஒரு காரணம். எல்லாருமே ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்து விட்டால் அதை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில்தான் படங்களை கவனித்து செய்வார்கள்.

ஆனால் அரவிந்த்சாமி அப்படி எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியை தழுவியது. மணிரத்னம் மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் வெளிவந்த படங்களை தவிர மற்ற படங்கள் ரசிகர்களை கவரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தற்போது தனி ஒருவன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மாஸ் நடிகராக மாறிவிட்டார் அரவிந்த்சாமி. இப்போது ரொமான்ஸில் கலக்கும் அரவிந்த்சாமி ஆரம்ப காலகட்டங்களில் நடிகைக்கு முத்தம் கொடுக்கவே பயந்தாராம்.

அரவிந்த்சாமி மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் ரோஜா. ரோஜா படத்தில் நடிக்கும்போது அரவிந்த் சாமிக்கு வெறும் இருபத்தி ஒரு வயதுதான். அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்க மதுபாலா என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு ரொமான்டிக் காட்சியில் மதுபாலாவிற்கு அரவிந்த்சாமி இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கும்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டது.

ஆனால் அப்போது வெட்கப்பட்டு விலகி நின்றதாகவும் அதன் பிறகு மணிரத்னம் சமாதானம் செய்து அந்த காட்சியில் நடிக்க வைத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments