நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணத்தினால் நாட்டை தொடர்ந்து முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்படும்.எவ்வாறாயினும் விரைவில் நாடு வழமை நிலைக்கு திரும்ப வேண்டும்.கொவிட் தாக்கத்தினுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.கொவிட்-19 இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

Comments