நிறுவனங்களின் உற்பத்தித்திறனையும் இணைப்பையும் அதிகரிக்க Google Workspace உடன் இணைகின்றது டயலொக் எண்டர்பிரைஸ் | தினகரன் வாரமஞ்சரி

நிறுவனங்களின் உற்பத்தித்திறனையும் இணைப்பையும் அதிகரிக்க Google Workspace உடன் இணைகின்றது டயலொக் எண்டர்பிரைஸ்

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் கார்ப்பரேட் தீர்வுகள் பிரிவான டயலொக் எண்டர்பிரைஸ், Google Cloud உடன் இணைந்து, தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கும் சலுகைகள் மற்றும் சேவைகளுக்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் மற்றும் இணைப்பை மேம்படுத்தும் புதுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றது.

"எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சிறந்த டிஜிட்டல் கருவிகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்காக, Google Cloud உடனான இந்த ஒத்துழைப்பு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கனின் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என நம்புகின்றோம். இவ் கூட்டாண்மையுடன் தற்போதைய டிஜிட்டல் சேவைகள் எமது Cloud பாதையை வேறொரு பரிமாணத்திற்கு இட்டு செல்லும் என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் நிறுவன வணிக மற்றும் பெறு நிறுவன விற்பனை பிரிவின் உப தலைவர் நவின் பீரீஸ் தெரிவித்தார்.

டயலொக் எண்டர்பிரைஸ் அதன் Cloud வசதி மூலம் SMB வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக சேவை தொகுப்புகள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைகள் மூலம் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளைத் பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. Google Workspace ஆனது Gmail, Calendar, Drive, Docs, Sheets, Slides மற்றும் Meet உள்ளிட்ட பிரபலமான உற்பத்தித்திறன் பயன்பாடுகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள தேவையான விரிவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது பாவனையாளர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதற்கும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும் உதவுவதுடன் இதன் மூலம் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க மற்றும் வேலை அனுபவங்களை எங்கிருந்தும் தடையின்றி மேற்கொள்ள முடியும்.

"Hybrid புதிய வேலை கலாச்சாரமாக மாறுவதால், எங்கள் Workspace portfolio App ஆனது பணியாளர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் அவர்களின் பணியின் எதிர்காலத்தை உருவாக்க, ஒத்துழைக்க மற்றும் தொடர்பு கொள்ள உதவும்." என கூகிள் கிளவுட் ஆசியா பசுபிக் கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளின் நிர்வாக இயக்குனர் ஆஷ் வில்லிஸ் கூறினார்.

புதிய தொழில்நுட்பமானது மனித இணைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. Google Workspace ஒருவரின் இருப்பிடம், பங்கு, அனுபவ நிலை, மொழி மற்றும் சாதன விருப்பம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமமாக பங்களிக்கும் திறனை கொண்டுள்ளது.

Comments