உயிர்த்தெழுப்பு | தினகரன் வாரமஞ்சரி

உயிர்த்தெழுப்பு

தலைக்கு மேலொரு கடல்-வானம்
ஜொலிக்கும் தங்கத் தாமரைகள்- நட்சத்திரங்கள்
உணர்வு அலைக்கழிக்கும் அழகு
நிலைக்கும் நிம்மதிப் பெருமூச்சு
நீந்தும் நெருப்பின் அனல் வீச்சு
வெடிக்கும் பேருரு
துடிக்கும் சிறு கரு
முளைக்கும் முதல் குறுத்தோ
பறவைகள்
முற்றுப்புள்ளி இலா எழுத்தோ
மேகங்கள்
மரணிக்கும் சூரியனின்
குருதி கசியும் அந்தி வானிலே
உயிர்த்தெழுப்பை உற்று நோக்கிக் காத்திருக்கும்
அர்த்தமற்ற ஜந்து நான்

ரதிதேவி,
மானிப்பாய்

 

Comments