என் தஞ்சமே... | தினகரன் வாரமஞ்சரி

என் தஞ்சமே...

சிதறிய மல்லிகை
பூக்களை அள்ளி
குவித்தாற் போல்
சிந்திய முறுவலால்
போதையுற்ற வண்டாய்
கிரங்கிப் போனேனே
பதறிய பட்டாம்பூச்சி
சிறகடித்து பறப்பதாய்
குறுகுறு நடையால்
மயங்கித் திளைத்தேனே
அழுதமாய் ஒலிக்கும்
மழலைசொற் கேட்டு
முக்கனி மறந்து
முல்லைபூ உன்னை
கரும்பாய் நினைத்தேனே
குமுதமே குறும்பின்
சிகரமே குன்றாக
அழகே உன் மடி
என்றும் என் தஞ்சமே.

அலிறிஸாப், அக்குறணை

Comments