செலான் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கினை இணையதளத்தினூடாக ஆரம்பிக்கும் வசதி | தினகரன் வாரமஞ்சரி

செலான் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கினை இணையதளத்தினூடாக ஆரம்பிக்கும் வசதி

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, முதற்தர சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி கணக்கை இணையத்தளத்தினூடாக ஆரம்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கியின் இளம் வாடிக்கையாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமளவு பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றை உறுதி செய்யும் அதேநேரம் சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தளவு தொடர்புகளை பேணி இலகுவாக கணக்கை ஆரம்பிக்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கித் தீர்வுகளை வழங்குவதில் செலான் வங்கி முன்னோடியாகத் திகழ்கின்றது. வாடிக்கையாளர்கள் தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கிளைக்கு விஜயம் செய்யும் தேவையை குறைத்துக் கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல தீர்வுகளில் பிந்திய அங்கமாக ஒன்லைன் கணக்கு ஆரம்பிப்பு அமைந்துள்ளது. தமது பிள்ளைகளுக்கு டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் பெற்றோருக்கு, www.seylan.lk எனும் இணையப்பக்கத்தைப் பார்வையிட்டு, புதிய கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கையொப்பமிட்டு, தாம் விரும்பிய கிளை ஒன்றிலிருந்து தமது சேமிப்புப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் குறைந்த காலத்தையே செலவிட வேண்டியிருக்கும். இது, சிறுவர்களின் சேமிப்புப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு வழிகோலும்.

செலான் டிக்கிரி கணக்கினூடாக இளம் வாடிக்கையாளர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமளவு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றது. செலான் வங்கியின் Facebook பக்கமான www.facebook.com/SeylanBank மற்றும் வங்கியின் இணையத்தளமான www.seylan.lk இல் அல்லது 200 88 88 ஊடாக தொடர்பு கொண்டு இலங்கையின் முதல் தர சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Comments