வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளவர்களின் தடுப்பூசி வகை தொடர்பான சிக்கலுக்கு விரைவில் தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளவர்களின் தடுப்பூசி வகை தொடர்பான சிக்கலுக்கு விரைவில் தீர்வு

வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களின் தடுப்பூசி தொடர்பான சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளைஏற்றுக் கொள்ளாமை தொடர்பில் உலக சுகாதார

ஸ்தாபன மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் இலங்கை சார்பில் நாமும் பங்குபற்றியுள்ளோம் என்றார்.

 

Comments