ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஸ்ருதி ஹாசன் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து இருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன் தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Comments