ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவை வழமைக்கு! | தினகரன் வாரமஞ்சரி

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவை வழமைக்கு!

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அனைத்து புகையிர சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிர சேவைகள் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 21ஆம் திகதி வரைமாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்குள் முன்னெடுக்கப்படும் பஸ் போக்குவரத்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments