அத்துரலிய ரத்தன தேரரை பதவியிலிருந்து நீக்கியது அபே ஜன பல கட்சி | தினகரன் வாரமஞ்சரி

அத்துரலிய ரத்தன தேரரை பதவியிலிருந்து நீக்கியது அபே ஜன பல கட்சி

'அபே ஜன பல' கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை அந்தக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளது.

அந்த தீர்மானத்தை அக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த அத்துரலிய ரத்தன தேரர் கடந்த ஜனவரி மாதத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முதல் தடவையாக 2004ம் ஆண்டு தேசிய ஹெல உறுமய கட்சி மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர் அவர் நான்கு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


 

Comments