அரச சேவையாளர்களுக்கு Dialog தரும் பிரத்தியேக டேட்டா பக்கேஜ்கள் | தினகரன் வாரமஞ்சரி

அரச சேவையாளர்களுக்கு Dialog தரும் பிரத்தியேக டேட்டா பக்கேஜ்கள்

இலங்கையின் முன்ன ணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு சொந்தமான மற்றும் துணை நிறுவனமான டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ் பிரைவட் லிமிட்டட் (DBN), அரச ஊழியர்களுக்கான பிரத்தியேக ஹோம் பிராட்பேண்ட் பிற்கொடுப்பனவு டேட்டா பக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விசேட கொடுப்பனவு ரூ.600 என்ற மிக குறைந்த மாதாந்த கட்டணத்திலிருந்து (15GB Anytime Data மற்றும் 15GB FREE Night Bonus Data) ஆரம்பமாவதுடன் ரூ. 9,900/- (360GB Anytime Data மற்றும் 360GB FREE Night Bonus Data) வரையில் பிற்கொடுப்பனவு பக்கேஜ் தெரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விசேட பக்கேஜ் உடன் நீங்கள் டயலொக் ஹோம் புரொட்பாண்ட் ரவுட்டரினை கொள்வனவு செய்யும் போது, ரூ. 1,000 விசேட விலைக்குறைப்புடன் ரவுட்டரினை ரூ. 1,990க்கு பெற்றுக்கொள்ள முடியும். அரச துறை ஊழியர்கள் டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் தங்களுடைய சேவைக்கான அடையாள அட்டை மற்றும் சம்பள அறிக்கையினை சமர்ப்பித்து இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் புரோட்பாண்ட் மற்றும் நிலையான தொலைத்தொடர்பு பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் திமுது குரே கருத்து தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் நம் தேசத்தை முன்னேற்றுவதற்காக அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பாராட்டும் வகையில் அரச துறை ஊழியர்களுக்கு இந்த விசேட டயலொக் ஹோம் புரோட்பாண்ட் கொடுப்பனவினை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அரச துறையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான மற்றுமொரு அம்சமாகும். மேலும் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளிப்பதில் நாங்கள் முன்னணியில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

 

Comments