இத்தாலிக்கான புதிய தூதுவராக ஜெகத் வெள்ளவத்த | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இத்தாலிக்கான புதிய தூதுவராக ஜெகத் வெள்ளவத்த

இத்தாலிக்கான புதிய தூதுவராக ஜெகத் வெள்ளவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக ஜெகத் வெள்ளவத்த நியமிக்கப்பட்டமைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இந் நியமனம்வழங்கப்பட்டுள்ளது.

உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு இந்த நியமனத்தை நேற்று அனுமதித்துள்ளது.ஏற்கனவே அவர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு பாராளுமன்றக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்.

இதேவேளை நைஜீரியாவுக்கான தூதுவரான ஜனக பிரியந்த பண்டார, மியன்மாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் ஜேஜே ரட்னசிறி, ஜே.எம் உதித் ஜெயசிங்க ஆகியோர் முறையே பொது நிர்வாகம்,விவசாய அமைச்சுக்கான செயலாளர்களாகவும், , எஸ்.எம் பியதிஸ்ஸ ஆபரணத் தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

Comments