போலி இரத்தினக்கற்கள் தாராளமாக புழக்கத்தில் | தினகரன் வாரமஞ்சரி

போலி இரத்தினக்கற்கள் தாராளமாக புழக்கத்தில்

போலியாக தயாரிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் அத்தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி இரத்தினக்கல் சந்தை வட்டாராங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் பிரசித்தம் பெற்றதாகும்.

இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம், சிவப்பு, ஆர்நூல் புஷ்பராகம், மரகதம், வைரோடி, பத்மராகம்,கெவுடா, பசிங்கல் போன்ற இரத்தினக்கற்கள் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இப்பகுதிகளிலுள்ள பலர் பொலிஸாரிடமும் இரத்தினக்கல் அதிகாரசபையிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

போலி இரத்தினக்கற்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உரிய தகவல்களுடன் முறைப்பாடுகளைச் செய்யுமாறு இரத்தினக்கல் அதிகார சபை மற்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினக்கல் வர்த்தக சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதால் நடமாடும் இரத்தினக்கல் ஆய்வு கூடமொன்று இப்பிரதேசத்துக்கு அவசியம் என்பதை இத்தொழிலில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments