செலான் வங்கியின் ருவன்வெல்ல கிளை இடமாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

செலான் வங்கியின் ருவன்வெல்ல கிளை இடமாற்றம்

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி தனது ருவன்வெல்ல கிளையை அதிகளவு இடவசதி படைத்த புதிய கட்டடத்துக்கு மாற்றியுள்ளது. 2021 செப்டெம்பர் 21ஆம் திகதி இந்தக் கிளை இல. 52, கேகாலை வீதி, ருவன்வெல்ல எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டது.

புதிய ருவன்வெல்ல கிளை அதிகளவு இடவசதிகளைக் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் வளாகத்தினுள் பிரவேசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும், ATM சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது. நியம பணி நேரங்களில் இந்தக் கிளை திறந்திருக்கும். வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் இந்தக் கிளை அமைந்திருப்பதுடன், உயர் சௌகரிய மட்டங்களை உறுதி செய்வதாகவும் உள்ளது.

தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில், நாளாந்த செயற்பாடுகளை நிர்வகிக்கும் போது சுகாதார அதிகாரத் தரப்பினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சகல வழிகாட்டல்களையும் செலான் வங்கி பின்பற்றுவதுடன், சகல வாடிக்கையாளர்களையும் சம்பந்தப்பட்ட வழிகாட்டல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருப்பதற்கு ஊக்குவிக்கின்றது. தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகளை பயன்படுத்துமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் கோருவதுடன், மேலதிக தகவல்களுக்கு www.seylan.lk எனும் வங்கியின் இணையத்தளத்தை பார்வையிட முடியும். வாடிக்கையாளர்கள் வங்கியின் 24/7 ஹொட்லைன் இலக்கமான 112 00 88 88 உடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

Comments