நூல் வெளியீடு; 19cccc 'அசன்பே யுடைய கதை ஓர் மீள் வாசிப்பு' | தினகரன் வாரமஞ்சரி

நூல் வெளியீடு; 19cccc 'அசன்பே யுடைய கதை ஓர் மீள் வாசிப்பு'

அ.வா: முஹ்சீன் எழுதிய ”அசன்பே யுடைய கதை ஓர் மீள் வாசிப்பு” நூல் வெளியீட்டு விழா வெள்ளாப்பு வெளி ஏற்பாட்டிலும், ACS Medical Services நிறுவனத்தின் அனுசரணையுடனும் ஒக்டோபர் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 வரை கொழும்பு-14,- லயர்ஸ்புரோட்வே (Layard's Broadway) வீதி, இல, 243, இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ACS மெடிகல் சேர்விஸஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

"கலாபூஷணம்" தாசிம் அஹமட் தலைமையில் நடைபெறும்,இவ்விழாவில் பேராசிரியர். ஏ. ஹுசைன்மியா பிரதம அதிதியாக கலந்து கொள்வார். நூலின் முதற்பிரதியை "புரவலர்" ஹாஷிம் உமர் பெற்று கொள்வார்.

கௌரவ அதிதியாக : "கலாபூஷணம்" ரஷீட் எம். இம்தியாஸ் கலந்து கொள்வார். நூல் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்த நூல் அறிமுகவுரையை மேமன் கவி நிகழ்த்துவார். . நூலாய்வுயை கவிஞர்

எஸ். முரளிதரன் முன் வைப்பார்.

சிறப்புப் பிரதிகளை K.M. சலீம் (SLACS )Dr. முஸ்தாக் அஹமட், சுஹைதா ஏ. கரீம் ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள், ஏற்புரையை நூலாசிரியர் அ.வா, முஹ்சீன் நிகழ்த்துவார்.

Comments