நஞ்சற்ற விவசாயத்துக்கு நனோ உரம் | தினகரன் வாரமஞ்சரி

நஞ்சற்ற விவசாயத்துக்கு நனோ உரம்

நனோ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பாவிக்கப்படும். சமூக-பொருளாதார மாற்றத்திற்கு புதிய கோணங்கள் காரணமாக அமைந்துள்ளன. நனோ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட யூரியா முதற்தடவையாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாவிக்கப்பட்டது. பவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் நைட்ரஜன் உரம் டிரோன் இயந்திரம் மூலம் விசிறப்பட்டது. பல பிராந்தியங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 34 விவசாயிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்திய பத்ம ஸ்ரீ விருது பெற்ற விவசாயிகளும் அதில் அடங்கியுள்ளார்கள். நனோ தொழில்நுட்பம் குறித்த கருத்தை இந்தியா முழுவதும் பரப்புவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த முடியும் என கருதப்படுகிறது.

நனோ துணிக்கைகள் இயற்கையாகவும் மற்றும் செயற்கையாகவும் உள்ளன. அது 1950ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நனோ துணிக்கையின் பரிமாணம் மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதியாகும். ஆனால் அது வலுவானதும் மற்றும் பாரமற்றதுமாகும். பொருட்களை எரிப்பதிலும் மற்றும் கடலரிப்பு சந்தர்ப்பங்களிலும் துணிக்கை இயற்கையாக அவதானிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூடங்களில் உற்பத்தி செய்யப்படும் நனோ துணிக்கை பொறியியலில் நனோ துணிக்கை என அறிமுகம் செய்யப்படுவதோடு அவை பல இரசாயன திரவியங்களுடன் கலப்பதால் உயர் பெறுபேற்றை பெற முடியும். யூரியாவுடன் கலக்கப்படும் நனோ துணிக்கைகள் நைட்ரஜன் தேவைக்காக மிகவும் பிரயோசனமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு அமைய நனோ யூரியா மாத்திரமல்ல நனோ சின்க் மற்றும் நனோ கொபர் போன்ற திரவ உரங்களும் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த உரத்தை களத்தில் பயன்படுத்திய பின்னர் பயிருக்கு ஏற்றவாறு மெல்ல, கிரமமாக விடுவிக்கப் படுவதோடு அது உரத்தை அதிகமாக மண்ணுக்கு பெற்றுக்கொடுத்து விரயமாவதை குறைப்பதாக களப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அறிக்கைகள் குறிப்பிடுவது போன்று நனோ உரத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவு நூற்றுக்கு ஐம்பது வீதம் குறைவதோடு அறுவடையும் நூற்றுக்கு15- முதல் 30 வீதம் அதிகரிக்கின்றது. யூரியா மாத்திரமல்ல ஏனைய உரங்களையும் தேவையான அளவு விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க கவனம் செலுத்த வேண்டியது விவசாய அதிகாரிகளின் பொறுப்பாகும். சாதாரண யூரியா உரத்துக்கு இணைந்ததாக நனோ உரம் சூழலுக்கு இயைந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சாதாரணமாக 500 மில்லி லீற்றர் போத்தலொன்று 500 கிலோ கிராம் உரத்துக்கு சமமான கொள்ளளவு கொண்டது. கையாளுவதற்கு இலகுவானது,மண் உறிஞ்சும் தன்மை மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றிற்கு உயர்ந்த பெறுபேற்றை காட்டுவது முக்கியமான விடயங்களாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நனோ தொழில்நுட்ப யூரியா உரத்தை பரிசோதித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இலங்கைக்கும் கிடைத்துள்ளது. இந்திய அரசின் உயரதிகாரிகள் குறிப்பிடுவது போன்று இந்த மாதிரி உரம் இலங்கையிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது உலகில் முதற்தடவையான கண்டுபிடிப்பு என இதனை சுட்டிக் காட்டலாம். இந்தியா இப்போதுபெற்றுள்ள சிறந்த பெறுபேற்றை கருத்தில் கொண்டு இந்திய விவசாயிகளுக்கு இந்த நனோ உரத்தை வழங்கும் பொறி முறையை தற்போது ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கும் அந் நன்மையை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இரசாயன உரம் தொடர்பான கருத்து நீண்ட காலமாக எமது நாட்டில் நிலவுகிறது. நஞ்சற்ற விவசாயம் பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரசாயன உர பாவனை நிறுத்தப்பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விடயத்தின் பலனே அதுவாகும். எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவு கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி உள்ளிட்ட அரசினது எண்ணமாகும். அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சந்தேகம், அவ நம்பிக்கை உள்ளதாக தெரிவதோடு சம்பிரதாய முறைகளுக்கு அப்பால் சென்று புதிய கட்டமைப்புக்குள் நுழைவது இலகுவானதல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும். தற்போது உபயோகப்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொள்ளும்போது நனோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்படும் உர பாவனை சிறந்த சந்தர்ப்பமாகும். விவசாயத்தில் புத்தெழுச்சியை நோக்கமாகக் கொண்டு புதிய அனுபவங்களை தேடிச் செல்லவேண்டும். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய விவசாயிகள் நனோ உர பாவனை குறித்து கூறும் கருத்துக்கள் நவீன தொடர்பாடல் மூலம் நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். புதிய முறை பற்றிய விளக்கங்களுக்கு விவசாயிகளிடையேயான தொடர்பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

தமிழில்: வீ.ஆர்.வயலட்

Comments